கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் ரூ.253 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்ததுடன் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, இன்று தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது :

கன்னியாகுமரி மாவட்டம் கடல்சீற்றம் மற்றும் பேரிடர் காலங்களில் அதிகளவு கடலரிப்பு ஏற்பட்டு, தடுப்பு சுவர்கள் சேதமடைந்துள்ளதை நேரில் பார்வையிடபட்டது. மேலும் துறைமுக முகத்துவாரத்தில் மணல் திட்டுகளினால் அதிகளவு உயிர்பலிகள் மற்றும் மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளது. எனவே தேங்காய்ப்பட்டணம் துறைமுக முகத்துவாரத்தில் படித்துள்ள மணல் திட்டுகளை அப்புறப்படுத்தி முகத்துவாரத்தினை நீட்டி தர வேண்டுமென்று சட்டமன்ற உறுப்பினர்கள், மீனவர்கள், மீனவ சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கோரிக்கை வைத்திருந்தனர்.
இக்கோரிக்கையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் மீனவர்களின் உற்ற நண்பனாக இருந்து, தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தினை சீரமைத்திட நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
அதனடிப்படையில் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக பணியானது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் உள்ள முத்தான திட்டமாகும். ரூ.60.00 கோடி (பகுதி 1), ரூ.77,00 கோடி (பகுதி II), ரூ.116.00 கோடி (பகுதி III) என 3 கட்டங்களாக இத்துறைமுக பணியானது ரூ.253.00 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.
அதனைத்தொடர்ந்து தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இரயுமன்துறை பகுதியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள துறைமுக திட்ட கோட்ட கட்டுமானப்பணிகளின் தற்போதைய நிலையினை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறியப்பட்டதோடு, குறிப்பாக, தேங்காப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தின் மேற்கு அலை தடுப்புச்சுவர் நீட்டிப்பு பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், இரயுமன்துறை பகுதியிலிருந்து வள்ளத்தின் மூலம் பயணித்து தாமிரபணி முகத்துவார பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இணையம் மற்றும் தூத்தூர் மண்டல விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளை ஆய்வு செய்யப்பட்டது. பின்பு தேங்காப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தினுள் மீன்கள் இறக்குதள வசதிகள் மற்றும் இதர கட்டுமான வசதிகளையும் நேரடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மீனவ பிரதிநிதிகள், மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் தேங்காய்பட்டணம் துறைமுக பணியை விரைந்து முடிக்க தேவையான கற்கள் சீரிய முறையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
துறைமுக முகத்துவாரம் மற்றும் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் மணல் திட்டுகளை அகற்றி ஆழப்படுத்த வேண்டும். ரூ.33.75 கோடி மதிப்பீட்டில் இறையுமன்துறை பகுதியில் அரசாணை பெறப்பட்ட பணியினை உடனே தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளார்கள்.

இக்கோரிக்கையினை பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா. தெரிவித்தார் .
இவ்ஆய்வின் போது, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர்.சின்னக்குப்பன், உதவி இயக்குநர் (தேங்காய்பட்டினம்) .அஜித் ஸ்டாலின், மற்றும் தேங்காப்பட்டினம் மீன்பிடி துறைமுக திட்ட உட்கோட்ட அலுவலர் .செல்வராஜ். அலுவலர்கள், மீனவ பிரதிநிதிகள். மீனவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.