- தஞ்சை பெரிய கோவிலை எழுப்பிய பேரரசன் இராஜராஜ சோழன் 1039 ஆண்டு சதய விழா இன்று (9ம் தேதி) துவங்குவதை முன்னிட்டு தஞ்சை நகர் முழுவதும் மின்விளக்குகளால் பந்தல் அமைத்து. தோரணங்கள் தொங்கவிடப்பட்டு தஞ்சை நகரமே மின் விளக்குகளால் ஜொலித்து விழாக் கோலம் பூண்டுள்ளது
தஞ்சை பெருவுடையார் கோவில் கட்டிடக்கலைக்கும் சிற்பக் கலைக்கும் ஓவியத்திற்கும் நீர் மேலாண்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது
இத்தகைய சிறப்புமிக்க பெருவுடையார் கோயிலை எழுப்பிய பேரரசன் இராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார்
அவர் பிறந்த தினம் ஆண்டுதோறும் சதய விழாவாக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது
இதன்படி 10 39 ஆம் ஆண்டு சதய விழா இன்று காலை மங்கள இசையுடன் துவங்குகிறது
சதய விழாவை ஒட்டி தஞ்சை நகர் முழுவதும் மின்விளக்குகளால் பந்தல் அமைத்து தோரணங்கள் தொங்கவிடப்பட்டு நகரமே மின்விளக்குகளால் ஜொலிக்கிறது
மேலும் கோவில் கோட்டை சுவர் முன்பு அமைந்துள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளன இதனால் நகர் முழுவதும் விழா கோலம் பூண்டுள்ளது.
கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/gandashashti-ceremony-was-held-at-andarkuppam-balasubramania-swamy-temple-near-ponneri-with-much-fanfare/
விழாவின் முக்கிய நிகழ்வாக இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு 10ம்தேதி காலை நடைபெறுகிறது
விழாவின் முத்தாய்ப்பாக 1039 நடன கலைஞர்களின் .நாட்டிய நிகழ்வு பெரிய கோவில் நந்தி மண்டபம் மேடையில் நடைபெறுகிறது.
தஞ்சை பெரிய கோவிலை எழுப்பிய பேரரசன் இராஜராஜ சோழன் 1039 ஆண்டு சதய விழா இன்று (9ம் தேதி) துவங்குவதை முன்னிட்டு தஞ்சை நகர் விழாக் கோலம் பூண்டுள்ளது.!

Leave a Reply
You must be logged in to post a comment.