கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில்,”மானமிகு சுயமரியாதைக்காரர் – மாநில உரிமையின் முகம் – பேரறிஞர் அண்ணா கண்ட மாபெரும் தமிழ்க் கனவைத் தன் நெஞ்சிலேந்தி நனவாக்கிய கொள்கை வீரர் தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நாளை தொடங்கவுள்ளதையொட்டி ‘கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை’ மகாத்மா காந்தியடிகளின் பேரனும் மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான மாண்புமிகு கோபாலகிருஷ்ண காந்தி அவர்கள் முன்னிலையில் வெளியிட்டோம்.
கலைஞர் நூற்றாண்டு விழா என்பது வெறுமனே புகழ்பாடும் கூட்டங்களாக அல்லாமல், மக்கள் பயன்பெறும் விழாவாக அமைய இருக்கிறது. அவ்வகையில்தான், கிண்டியில் மருத்துவமனையும் மதுரையில் நூலகமும் பிரமாண்டமாக எழுந்து நின்று திறப்பு விழா காண உள்ளன. இவ்வரிசையில், காலமெல்லாம் கலைஞரின் புகழ் ஒளிரும் வகையில் மற்றுமொரு பெருமைமிகு அடையாளமாக #KalaignarConventionCentre எனும் உலகத்தரத்திலான பயன்பாட்டுச் சின்னம் 25 ஏக்கர் பரப்பளவில் அறிவுக்குடியிருப்பாக அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டேன்.
ஆண்டு முழுவதும் கலைஞர் சாதனைகளை எடுத்துச் சொல்லி, மக்கள் மகிழ்ச்சி அடையும் திட்டங்களுடன் கலைஞர் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாட அமைச்சர்கள், உயர் அலுவலர்கள், பல்துறை வல்லுநர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்படும்!” எனக் குறிப்பிட்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.