நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக தோல்வியடையும்-கே.பாலகிருஷ்ணன்

1 Min Read
கே.பாலகிருஷ்ணன்

பாரதி ஜனதா கட்சி தோல்வி முகம் கண்டுள்ளது அது நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரத்தில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது.

கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட இந்த திருப்புமுனை பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றார். கர்நாடகாவில் மோடி, அமித்ஷா ஆகியோர் வீதி, வீதியாக சென்று ஓட்டு கேட்டபோதும் கூட பாஜகவால் வெற்றி பெற முடியவில்லை. ஒரு மிகப்பெரிய தோல்வியை பாஜக சந்தித்துள்ளது.

இது கர்நாடகாவில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வி மட்டுமல்ல அகில இந்திய பாஜகவிற்கும் மோடி, அமித்ஷா கூட்டணிக்கும் ஏற்பட்டிருக்கிற மரண அடி என்பது தான் உண்மை என்றார். இமாச்சலப் பிரதேசம், டெல்லி கார்ப்பரேஷன், சிம்லா மேயர் தேர்தல் தற்போது கர்நாடகா தேர்தல் என அடுத்தடுத்து தேர்தல்களில் தொடர் தோல்விகளை பாஜக சந்தித்து வருகிறது.

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக படுதோல்வி அடைவதற்கு இந்த தேர்தல்கள் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.

தமிழகத்தில் குழந்தை திருமணம் செய்த புகாரில் தீட்சிதர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அது தவறு என ஆளுநர் கூறுகிறார். இப்படி ஒரு ஆளுநரை இந்தியாவில் நாம் பார்த்ததே இல்லை. எனவே இப்படிப்பட்ட ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இதற்காக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Share This Article

Leave a Reply