மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரின் படுக்கையின் மேல் கால் வைத்து விசாரித்த உதவியாளர்.

2 Min Read
விசாரிக்கும் உதவி ஆய்வாளர்

செஞ்சியை அடுத்து கடலாடிக் குளம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிப்பவர் பிரேம குமாரி இவர்களது வீட்டின் அருகே அரசு மதுபான கடை ஒன்று இயங்கி வருகிறது. இரவு பகல் என பாராமல் வெளியூரில் இருந்து வருகிற நபர்கள் அரசு மதுபான கடையில் மதுபானங்களை வாங்கிக் கொண்டு பிரேம குமாரி வீட்டின் அருகில் உள்ள வயல்வெளியில் தான் குடிப்பது வழக்கம்.

- Advertisement -
Ad imageAd image
படுக்கையின் மீது கால்

சிலநேரம் குடிகாரர்களிடையே காரசாரமான விவாதம் கைகலப்பு என தினந்தோறும் பகல் இரவு முழுவதும் நடைபெறுவது வழக்கம். இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னால் மது பிரியர்கள் இருவர் பிரேம குமாரி வீட்டிற்கு வந்து தண்ணீர் கேட்டுள்ளனர். தண்ணீர் தர மறுத்ததால் அவர்கள் தகராற்றில் ஈடுபட்டனர்.

இந்த நேரத்தில் பிரேம குமாரின் கணவர் ஜாய் எபினேசர் அங்கு வந்தவுடன் வாக்குவாதம் அதிகரித்தது. அதன் பின்னர் மது பிரியர்கள் கணவன் மனைவி இருவரையும் தாக்கியுள்ளனர். பாதிப்புக்கு உள்ளான பிரேம குமாரி செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந் நிலையில் நல்லான் பிள்ளைபெற்றாள் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சையத் முகமது அலி செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரேம குமாரியை சந்தித்து வாக்குமூலம் பெற்றுள்ளார்.

அப்போது அவர் நடந்து கொண்ட விதம் மிக மோசமானதாக இருந்துள்ளது. பிரேம குமாரி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தவர் படுக்கையின் மீது உதவி ஆய்வாளர் சையத் முகமது அலி தன்னுடைய வலது காலை எடுத்து படுக்கையின் மீது வைத்துக்கொண்டு விசாரணை என்கிற பெயரில் அவரை அவமானப்படுத்தி உள்ளார். காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிரேம குமாரி கோரிக்கை விடுத்துள்ளார். காவல்துறையினர் இது போன்ற நடவடிக்கைகள் பொதுமக்களிடையே காவல்துறையினர் மீது உள்ள மதிப்பை மேலும் இழக்க செய்துவிடும் என்பதனை காவல்துறையினர் தெரிந்து கொள்ள வேண்டும்.

Share This Article

Leave a Reply