கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் கடந்த ஆறு மாதங்களாகவே தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் மக்களை தேடி மனுக்கள் பெரும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது, அதனை முன்னிட்டு கடம்பூரில் மக்களை தேடி மனுக்கள் பெரும் சிறப்பு முகாம் நடைபெற்றது, இந்த சிறப்பு முகாமில் முதியோர் உதவித்தொகை,இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டார்கள்,
இந்த சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத் மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது, மக்களை தேடி மனுக்கள் பெரும் சிறப்பு முகாமில் கலந்து கொண்ட கிராம மக்கள் கோரிக்கை மனுக்கள் வழங்கிட இருந்த நிலையில் அவர்களுக்கு தலை வாழ இலையில் வடை பாயாசத்துடன் அறுசுவை விருந்தளித்து அதன் பின்னர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

இந்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அதன் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர், மேலும் சிறப்பு முகாமில் அறுசுவை உணவுடன் விருந்து அளித்ததால் அப்பகுதியே திருவிழாவைப் போல் காட்சியளித்தது.
அறுசுவை உணவை உண்டு மகிழ்ந்த கிராம மக்கள் அனைவரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து இளையனார்குப்பம். அத்தியூர். பகண்டை கூட்டுச்சாலை பகுதிகளிலும் மக்களை தேடி மனுக்கள் பெரும் முகம் நடைபெற்றது. இதில் திரளானோர் வந்திருந்து மனுக்களை வழங்கினார்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.