மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கோவணம் கட்டி கொண்டு திருவோடு ஏந்தி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட ஆட்சியரை கண்டித்தும் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளை கண்டித்தும், கோவணம் கட்டி கொண்டும், திருவோடு ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை நிர்வாகி உட்பட அந்த கட்சியினர் போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆதிதிராவிடர் துறை சார்பில் ஆதிதிராவிடர் மக்களுக்கான வீட்டு மனை பட்டா கேட்டு பலமுறை மனு கொடுத்துள்ளனர். இந்த விசாரணை முடிந்த பிறகும் பட்டா வழங்காமல் இருப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளை கண்டித்தனர்.

அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மண்டல செயலாளர் சுசி.கலையரசன் கோவணம் கட்டி கொண்டும், திருவோடு ஏந்தியும் போராட்டத்தில் ஈடுப்பட்டார். இந்த போராட்டத்தில் இவருடன் சுமார் 10-க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
அப்போது மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் கோவையில் அம்பேத்கர் சிலை நிறுவ வேண்டும். அப்போது பஞ்சமி நிலங்களை மீட்டெடுத்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கோரிக்கையாக முன்வைத்தனர்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுசிகலையரசன்;- வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையினர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும், இதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இதன் காரணமாகவே கோவனம் கட்டி, திருவோடு ஏந்தி மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், அப்போது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார். மேலும் இந்த போராட்டம் மெத்தனமாக செயல்படும் அரசு அதிகாரிகளை கண்டித்தனர்.

மேலும் கூட்டணிக்கும் போராட்டத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். இதை அடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.