நடந்து முடிந்த 18-வது நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் இண்டியா கூட்டணி சார்பில், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன.
இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், “நடந்து முடிந்த 18-வது நாடாளுமன்ற தேர்தலில் திமுகழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் இண்டியா கூட்டணி சார்பில், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன.
இண்டியா கூட்டணிக்கு எதிராகவும், இந்தக் கூட்டணியை உருவாக்கி வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த திமுகழகத்தின் மீதும் பாஜக தலைவர்கள் வெறுப்பூட்டும் அருவறுப்பு பரப்புரையில் ஈடுபட்டனர். அதிகாரத்தையும், அளவற்ற பண செல்வாக்கையும் பயன்படுத்தி பல்வேறு பகுதியினரை மிரட்டி. ஆதரவு தெரிவிக்குமாறு நிர்பந்தித்தனர். பிரதமர் மோடி ஒன்பது முறை தமிழ்நாட்டுக்கு வந்து பரப்புரை மேற்கொண்டார்.

பாஜக ஆதரவாக நின்ற ஊடகங்கள் செய்தி என்ற பெயரிலும் கருத்து கணிப்பு என்ற பெயரிலும் அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை திணித்து குழப்பங்களை ஏற்படுத்தி வந்தனர்.
இவை அனைத்தையும் நிராகரித்து புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து மாபெரும் வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கும், ஆதரித்த பொதுமக்களுக்கும், தேர்தல் களத்தில் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வெற்றிக்கு வழி வகுத்த திமுகழக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு பாரட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.



Leave a Reply
You must be logged in to post a comment.