தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மகாராஜா சமுத்திர வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட 2,500 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர் . இந்நிலையில் இந்த இடம் மராட்டிய மாநிலத்தை பூர்விமாகக் கொண்ட காட்கேராவ் சாகேப் குடும்பத்திற்கு சொந்தமென தற்போது கூறப்படுகிறது. .
இத்தகைய சூழ்நிலையில் இந்த இடத்தை காலி செய்யுமாறு காட்கேராவ் சாகேப் குடும்பத்தை
சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது . வழக்கை விசாரித்த நீதிமன்றமும் உடனடியாக ஆக்கிரமப்புகளை அகற்றி இங்கு பல ஆண்டுகளாக வாழும் மக்களையும் அப்புறப்படுத்த உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் வசித்து வரும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காட்கேராவ் சாகேப் குடும்பத்தை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல வருடங்களாக வாழ்ந்து வருவதால் மகாராஜா சமுத்திர வருவாய் கிராமத்தில் உள்ள 2500 ஏக்கர் நிலமும் தங்களுக்குத் தான் சொந்தம் என கூறி , இப்பகுதியில் வாழ்ந்து வந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் .
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள் ‘நடப்பது மக்கள் ஆட்சியா அல்லது மன்னர் ஆட்சியா’ , எனவும் ‘பாதிக்கப்பட்ட எங்களுக்கு தமிழக அரசே பாதுகாப்பு கொடு’ , உள்ளிட்ட பதாகைகளை ஏந்திய படி , வெயில் என்றும் பாராமல் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள் , தாங்கள் தற்போது குடியிருக்கும் வீடுகள் அனைத்தும் முறையாக பதிவு துறைமூலம் பதிவு செய்து, வருவாய் துறை அதிகாரிகள் மூலம் பட்டா பெற்று , அரசு வங்கிகள் மூலம் கடன் பெற்று , நகராட்சி அனுமதியோடு வீடுகளை கட்டி, வீட்டு வரி, தண்ணீர் வரி, தொழில் வரி போன்றவைகளை இதுநாள் வரை முறையாக செலுத்தி வருவதாகவும் தெரிவித்தனர் .
தங்குளுக்கென இந்த இடத்தில நகராட்சி, ஊராட்சி, பஞ்சாயத்து யூனியன் போன்ற அரசு துறைகள் மூலம் சாலை வசதி, குடி நீர் வசதி, தெருவிளக்கு வசதி, கழிவுநீர் வசதிகளை செய்து கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது, தங்களின் வீடுகளை அகற்ற வருவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்ற ஒற்றை கோரிக்கையோடு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
விவசாய நிலங்களையும், பத்தாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அனைத்து கட்சி தலைவர்கள், அனைத்து கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் , அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் , சுமார் 1000 திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
மகாராஜா சமுத்திர கிராம மக்களின் இந்த உண்ணாவிரத போராட்டத்தினால் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது .
Leave a Reply
You must be logged in to post a comment.