தஞ்சை : அருள்மிகு. சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சூரசம்ஹாரம் அரோகரோ கோஷத்துடன் சிறப்பாக நடைபெற்றது…

1 Min Read
  • தஞ்சை பூக்கார அருள்மிகு. சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சூரசம்ஹாரம் அரோகரோ கோஷத்துடன் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சஷ்டியின் 6ம் நாளான 07ம் தேதி இரவு தஞ்சை பூக்கார தெருவில் எழுந்தருளி இருக்கும் பிரசித்தி பெற்ற அருள்மிகு. சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.

- Advertisement -
Ad imageAd image

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு இணையாக போற்றப்படும் இக்கோவில் பிரகாரத்தில் அரக்கனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

அப்போது கோவிலில் திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி வழிபட்டனர். சூரசம்ஹாரம் முடிந்த உடன் 6 நாள் விரதம் மேற்கொண்டு இருந்தவர்கள் பானகம் பருகி – விரதத்தை முடித்து கொண்டனர்.

சூரசம்ஹாரதின் வரலாறு : சூரசம்ஹாரம் என்பது சூரபத்மன் எனும் அரக்கனை அழித்த நிகழ்வாகும். சூரபத்மனை முருகன் அழித்தார். அதன் நினைவாக முருகனுடைய ஆலயங்களில் இந்த நிகழ்வினை விழாவாக கொண்டாடுகிறார்கள்.

காசியப்ப முனிவருக்கும் மாயை என்பவளுக்கும் பிறந்தவர் சூரபத்மன். அவன் வளர்ந்த பிறகு சிவபெருமானை நோக்கி தவமிருந்து இந்திர ஞாலம் எனும் தேரையும், பெண்ணால் பிறக்காத குழந்தையால் மட்டுமே மரணம் என்ற வரத்தையும் பெற்றான். பெற்ற வரத்தால் சக்திகள் மிக்கவனாக தேவர்களையும், நல்லுயிர்களையும் துன்புறுத்தினான். சிவபெருமானின் ஆறு முகங்களிலிருந்து பிறந்த ஆறு நெருப்புப் பொறிகள் வந்தன. அதனை வாயுபகவான் சரவணப் பொய்கையில் சேர்த்தார். அவை ஆறு குழந்தைகளாக கார்த்திகைப் பெண்டிரிடம் வளர்ந்தன. பார்வதி அவர்கள் ஆறு பேரையும் தழுவும் போது அவர்கள் சண்முகனாக ஆனார்கள். பின்பு பார்வதியிடம் வேலைப் பெற்ற முருகன் சூரபத்மனை போரில் அழித்தான்.இந்த போரில் வீரபாகு உள்ளிட்ட நவவீரர்கள் முருகனுக்கு படைத்தளபதிகளாக இருந்தனர்.

கொஞ்சம் இதையும் படிங்க :  http://thenewscollect.com/surasamhara-was-held-tonight-at-swamimalai-swaminatha-swamy-temple-near-kumbakonam/

 

Share This Article

Leave a Reply