- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு காவல் சரகத்திற்குட்பட்ட, வெட்டிக்காடு செல்லும் கல்லணை கால்வாய் ஆண்டிப்பட்டி நடைபாலம் அருகே அடையாளம் தெரியாத 5.5 அடி உயரம் கொண்ட 35 முதல் 40 வயது வரை மதிக்கதக்க ஆண் சடலம் கிடப்பதாக கடந்த அக்.30ம் தேதி போலீசாருக்கு தகவல் வந்தது.
இது குறித்து போலீசார் அப்பகுதியில் விசாரணை நடத்தினர். ஆனால், எந்தவிதமான துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடப்பதாகவும், அவரது கழுத்து, கைகளில் குத்தி இருந்த பச்சையை அடையாளமாக குறிப்பிட்டு, அந்த போட்டோவுடன் போலீசார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.

இதில், அடையாளம் குறித்த தகவல்கள், போலீசார் தொடர்பு எண் உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் தமிழில் இருந்தது . ஆனால், அடையாளம் தெரியாத நபர் என்ற வாசகம், தமிழ், ஆங்கிலம், ஹிந்தியில் இருந்தன. அறிவிப்பில் முழுக்க முழுக்க தமிழில் உள்ள சூழலில், அடையாளம் தெரியாத நபர் என்பதை மட்டும் ஹிந்தியில் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இறந்தவர் வடநாட்டை சேர்ந்தவராக இருந்தாலும், தகவல்கள் முழுமையாக தமிழில் உள்ள சூழலில், அடையாளம் தெரியாத நபர் என்பது மட்டும் ஹிந்தியில் இருந்தது புரியாத புதிராக இருப்பதாக பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/villagers-gathered-and-protested-that-no-soil-should-be-dug-in-maduvu-water-body-argument-with-public-works-department-officials/



Leave a Reply
You must be logged in to post a comment.