- தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே சாலையோரத்தில் இருந்த தென்னை மரம் திடீரென வேரோடு சாய்ந்து முறிந்து சாலை நடுவில் விழுந்தது.
இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் இரண்டு பேரும் பலத்த காயமடைந்தனர்.

தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுக்கா கண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் முத்துகிருஷ்ணன் இருவரும் இரு சக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர்.
திருக்காட்டுப்பள்ளி சாலையில் கீழ திருப்பத்தூர் என்ற இடம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் இருந்து தென்னை மரம் வேரோடு முறிந்து சாலை நடுவில் விழுந்தது.இதனால் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/sewage-flowing-on-the-roads-for-more-than-ten-days-the-people-of-the-region-are-suffering-because-of-the-disease/
இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.காயம் அடைந்தவர்களை மீட்டு காவல்துறையினர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.



Leave a Reply
You must be logged in to post a comment.