அதிமுக, பாமக தேர்தல் மோதல் தொடர்பாக காமாட்சிபுரம் முன்னாள் அதிமுக செயலாளர் சண்முக ராஜேஷ்வரனை விசாரணைக்கு அழைத்து சென்ற போது, பந்தநல்லூர் காவல் ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், தன்னை பலமாக தாக்கியதாக சிசிடிவி காட்சி பதிவுகளுடன் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்.
மேலும் தாக்குதலில் காயமுற்ற அவர், தற்போது கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை முன்னாள் தமிழக அமைச்சர்கள் ஓ.எஸ் மணியன்,

ஆர்.காமராஜ் மற்றும் தஞ்சை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே பாரதிமோகன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் முன்னாள் கும்பகோணம் எம்.எல்.ஏ இராம இராமநாதன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
அதிமுக நிர்வாகி காவல்துறை ஆய்வாளரால் தாக்கப்படும் காட்சி பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

கடந்த 19 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற முதல்கட்ட நாடாளுமன்ற தேர்தலில், மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பந்தநல்லூர் காவல் சரகம், கோணுளாம்பள்ளம் வாக்கு சாவடி எண் 2-ல் அதிமுக முகவராக இருந்து சண்முக ராஜேஷ்வரன் பணி செய்த போது,
அதே வாக்கு சாவடியில் பாமக முகவராக பிரகாஷ் மற்றும் குமரன் ஆகியோர் சண்முக ராஜேஸ்வரனை மாம்பழ சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என மிரட்டும் தோனியில் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டு, சண்முக ராஜேஸ்வரன் வீட்டிற்கு திரும்பி சென்றதாக தெரிகிறது. இதேபோல் அதிமுகவை சேர்ந்த உலகநாதனிடமும் கூறியதால் அவருக்கும், பாமகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் பாமகவினர் உலக நாதனை தாக்கியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சண்முக ராஜேஷ்வரன், காயமுற்ற உலகநாதனை மீட்டு, முதற்கட்டமாக கோணுளாம்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை பெற்ற பிறகு,

மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பாமகவினர், தங்களை அதிமுகவினர் தாக்கியதாக கூறி, பந்தநலலூர் காவல் நிலையத்தில் புகாரை அளித்தனர்.

இதனை அடுத்து, சண்முக ராஜேஸ்வரன் தனக்கு சொந்தமான குடோனில் இருந்த போது அங்கு சென்ற பந்தநல்லூர் காவல் ஆய்வாளர் முத்துகிருஷ்ண ராஜா நீ என்ன பெரிய ரவுடியா என கேட்டு சண்முக ராஜேஸ்வரனை தாக்கியபடி அவரை விசாரணைக்காக அழைத்து செல்லும் சிசிடிவி வீடியோ காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

இதனை முக்கிய ஆவணமாக கொண்டு, அதிமுகவினர், அதிமுக மற்றும் பாமக இடையே ஏற்பட்ட தேர்தல் தகராறு தொடர்பான வழக்கில் பந்தநல்லூர் காவல் ஆய்வாளர் முத்துகிருஷ்ணராஜா,
ஒருதலை பட்சமாக செயல்படுதுவதுடன், சண்முக ராஜேஷ்வரன் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத்திடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காயமுற்று சிகிச்சை பெற்று வரும் சண்முக ராஜேஷ்வரனின் தந்தை கருணாநிதி அதிமுக திருப்பனந்தாள் வடக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார்.
இந்த நிலையில், சமூக வலை தளங்களில் விசாரணைக்காக சண்முக ராஜேஷ்வரனை காவல் ஆய்வாளர் முத்துகிருஷ்ண ராஜா அழைத்து செல்லும் போதே அவரை தாக்கும் சிசிடிவி காட்சிப்பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

இதனிடையே காவல் ஆய்வாளர் தாக்கியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சண்முக ராஜேஸ்வரனை, முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ் மணியன்,
காமராஜ் மற்றும் தஞ்சை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே பாரதிமோகன், மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் பவுன்ராஜ் முன்னாள் கும்பகோணம் எம்.எல்.ஏ இராம இராமநாதன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும், நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.