
தஞ்சை பெரியக்கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனருரை பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது, பெரியகோவிலில் மகாநந்தியம் பெருமானுக்கு மாதந்தோறும் பிரதோஷ வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெறும், அதைப் போல் வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் வீற்றிருக்கும் மஹா நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பக்தர்களால் வழங்கப்பட்ட திரவிய பொடி, அரிசி மாவுபொடி, மஞ்சள்,தேன்,பால், தயிர்,பழவகைகள், கரும்பு சாறு, சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு நந்தியம் பெருமான் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டது.
பிரதோஷம் காண்பதால் சகல ஐஸ்வர்யங்கள் கிட்டும், தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம், ஆகையால் இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.