தணிகை மீட்ட தளபதி விநாயகம் அவர்களின் 109-ஆம் பிறந்தநாளில் அவரது சாதனையை போற்றுவோம் என்று பாமக தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில்,” மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தமிழர் வாழும் பகுதிகள் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டதை எதிர்த்து போராடி வெற்றி பெற்ற தணிகை மீட்ட #தளபதிவிநாயகம் அவர்களின் 109-ஆம் பிறந்தநாள் இன்று. வடக்கெல்லை போராட்டத்தின் நாயகன் விநாயகம். அவரது முயற்சியால் தான் ஆந்திராவுடன் இணைக்கப்பட்ட திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள 365 கிராமங்கள் மீட்டெடுக்கப்பட்டன.
தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினைகளுக்காக முழங்கியவர்; ஆரோக்கியமான வாதங்களை முன்வைத்தவர். அவர் விட்டுச் சென்ற பணிகளை வெற்றியாக முடிக்க வேண்டிய பெருங்கடமை தமிழர்களுக்கு உண்டு. தளபதி விநாயகத்தின் பிறந்தநாளில் அவரது சாதனைகளை போற்றும் அதே நேரத்தில் அவர் நினைத்தை முடிக்க உழைக்கவும் உறுதியேற்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.