பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் ‘விடாமுயற்சி’ . இதனை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். அஜித்தின் 62-வது படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
நடிகர் அஜித் தற்போது லைகா நிறுவனம் தயாரிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார். இதற்கான படப்பிடிப்பு அதன் நாட்டில் சுமார் 90 நாட்கள் நடைபெற்றுள்ளது. இன்னும் 25 சதவீத காட்சிகளை படமாக்க வேண்டி உள்ளது.

இந்த நிலையில் நடிகர் அஜித் சிறிய அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்டு ஓய்வில் இருந்தார். அதற்குப் பிறகு தற்போது பைக் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இந்த நிலையில் விடா முயற்சி படத்தில் கார் சேசிங் சண்டைக்காட்சி படமாக்கியதை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதனால் மூன்று வீடியோக்களாக அந்த காட்சியை பட குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். அதில் நடிகர் அஜித்குமார் ஒருவரை காப்பாற்றி செல்லும் வழியில் கார் விபத்துக்குள்ளாகும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

இந்த காட்சியில் நடிகர் அஜித் டூப் இல்லாமல் நடித்திருக்கிறார். அப்போது கார் கவிழ்ந்து கிடக்கும் காட்சியும் அதன்னுல் அஜித் இருக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. நடிகர் அஜித் சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

ஆரம்பம் திரைப்படத்தின் போது இதுபோன்ற ஒரு காட்சியில் நடிக்கும் போது அவருக்கு விபத்து ஏற்பட்டது. பின்ன்ர் இருந்த போதிலும் அந்த காட்சியை வெற்றிகரமாக நடித்துக் கொடுத்தார். இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படத்திலும் இந்த காட்சியில் அவர் டூப் இல்லாமல் நடித்திருக்கிறார்.
Leave a Reply
You must be logged in to post a comment.