கர்நாடக மாநிலம், ஹாவேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது டெம்போ வேன் மோதிய கோர விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், 4 பேர் படுகாயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிவமொக்காவைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
சிவமொக்கா மாவட்டம், பத்ராவதி தாலுகாவில் உள்ள எம்மிஹட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள். மூன்று நாள் புனித யாத்திரையாக பெலகாவி மாவட்டத்தில் உள்ள சவதாட்டியில் உள்ள குலதெய்வமான யல்லம்மா தேவியை தரிசனம் செய்து விட்டு பெலகாவியில் உள்ள சிஞ்சாலியில் இருந்து புறப்பட்டு பத்ராவதியை அடையவிருந்தனர்.

டெம்போ வேன் ஹாவேரி அருகே பைடகி குறுக்கு அருகே உள்ள குண்டேனஹள்ளி கிராமம் அருகே வந்து கொண்டிருந்த போது புணே – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதிய கோர விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்,
4 பேர் படுகாயமடைந்தனர். லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். அந்த வழியாக சென்றவர்கள் 112-க்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மருத்துவக் குழுவினர், தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கோர வித்தில் பரசுராம் (66), பாக்யா (33), நாகேஷ் (34), விசாலஸ்கி (36), அர்பிதா (22), சுபத்ரா பாய் (68), புண்யா (2), ரூபா (2), மஞ்சுளா பாய் (2).58), ஆதர்ஷா (23), மானசா (33), மஞ்சுளா (55). இறந்த மற்றொருவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரட்டைக் குழந்தைகளை இழந்து சோகத்தில் மூழ்கியுள்ளது.
இதனிடையே, காயமடைந்து ஹாவேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 4 பேரையும் பார்ப்பதற்காக ஹோல் ஹொன்னூரில் இருந்து உறவினர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஹாவேரி காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) அன்ஷு குமார் கூறுகையில்;- லாரியை தவறாக தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தியதே விபத்துக்கு காரணம் என்று தெரிகிறது.
காயமடைந்த இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. லாரியின் ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் என்று அதிகாரி கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.