தென்காசி மாவட்டத்தில் திமுக தெற்கு மாவட்ட கழக செயலாளராக வழக்கறிஞர் சிவ பத்மநாதன் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மணிப்பூர் கலவரத்திற்கு எதிராக மகளிர் அணி சார்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தென்காசியில் திமுகவில் மகளிருக்கு உரிய பாதுகாப்பு இல்லை என மாவட்ட ஊராட்சி குழு தலைவி தமிழ்ச்செல்வி குற்றம் சாட்டினார்.
இதில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆதரவாளர்க்கும்,மாவட்ட ஊராட்சி குழு தலைவி ஆதரவாளருக்கும் இடையே கடுமையாம வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் எதிரொலியாக மாவட்ட செயலாளராக பணியாற்றி சிவபத்மநாதன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு சுரண்டை நகர செயலாளராக செயல்பட்டு வந்த ஜெயபாலன் என்பவரை திமுக தெற்கு மாவட்ட செயலாளராக நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
மாவட்ட செயலாளர் மாற்றம் குறித்த செய்தி திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதநாள முரசொலியில் வெளியாகி உள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.