
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுக பெருமாள் அய்யனார் கோவில் உள்ளது. சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பழமையான இந்த கோயில் இப்பகுதியில் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆலயத்தில் வைகாசி திருவிழா திருத்தேரோட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழா கடந்த ஜூன் 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒன்பதாம் நாள் திருவிழாவில் நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைபெற்றது, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நகர மற்றும் கிராமப்புறங்களைச் சார்ந்த ஏராளமான பக்தர்கள் இந்த திருத்திரு நிகழ்வில் கலந்து கலந்து கொண்டு பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

நான்கு ரத வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வந்த தேர் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. நான்கு ரத வீதியில் உலா வந்து . தேர் நிலையை அடைந்ததும் பக்தர்கள் தேங்காய்கள் லட்சக்கணக்கில் உடைத்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். சிதறிய தேங்காய் களை ஹெல்மெட் அணிந்து 50க்கும் மேற்பட்டோர் மூடைகளில் சேகரித்தனர்,
தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. சுற்றுப்புற பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
Leave a Reply
You must be logged in to post a comment.