வாலிபர் பலிக்கு காரணமான நாய் வீடு தேடிச்சென்று மன்னிப்பு கேட்டது. இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சாலையின் குறுக்கே வந்த நாயால், பைக்கில் ஒருவன் நிலை தடுமாறி கீழே விழுந்த வாலிபர் உயிர் இழந்தார். தன் தவறை உணர்ந்த நாய் வாலிபர் வீட்டிற்கு தேடி சென்று குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சி ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டம், ஹொன்னாளி காசினகெரே கிராமத்தில் வசித்து வந்தவர் திப்பேஷ் வயது 21. இவர் கடந்த 16 ஆம் தேதி இரவு அனவேரி என்ற கிராமத்தில் இருந்து காசினகெரே நோக்கி பைக்கில் வேகமாக சென்று கொண்டிருந்தார். குருபர வித்லபுரா என்ற கிராமத்தில் பைக்கில் வந்த போது சாலையின் குறிக்கே ஒரு நாய் ஓடி வந்தது. அந்த நாய் மீது மோதாமல் இருக்க, திப்பேஷ் தன் பைக்கை திருப்பினார். அப்பொழுது அவரது கட்டுப்பாட்டை இழுந்த பைக் சாலையில் கவிழ்ந்தது.

இந்த பைக்கில் இருந்து விழுந்த திப்பேஷ், தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சி அடுத்த நாள் நடந்து முடிந்தன. இந்த நிலையில் விபத்துக்கு காரணமான நாய் நேற்று முன் தினம் இரவு திப்பேஷின் வீட்டிற்கு தேடி சென்றது. வீட்டில் உள்ள அனைத்து அறைகளுக்கும் சென்று சுற்றி பார்த்தது. இதன் பின் திப்பேஷின் தாய் முன் சென்ற நாய் மன்னிப்பு கேட்பது போல நாயின் இரண்டு கால்களே மடக்கி அமர்ந்தது.

அதனை தொடர்ந்து நாயின் காலால், திப்பேஷின் தாயின் கையை வருடியது. இதனால் அவர் கண்ணீர் விட்டு மல்க அழுதார். நீ எந்த தவறும் செய்யவில்லை. எல்லாம் விதி, என்று நாயை பார்த்து அவர் ஆறுதல் கூறினார். இதை பார்த்து திப்பேஷின் உறவினர்கள் கண்களும் குளமாகின. பின் அந்த நாய் அங்கிருந்து சென்று விட்டது. தன் தவறை உணர்ந்து, நாய் மன்னிப்பு கேட்டு சென்றதாக கிராம மக்கள் பேசி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.