மதுபான கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மார்க்ஸிஸ்ட் கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு. சுமார் ஒரு மணி நேரம் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கடைதெரு பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. பிரதான கடை தெருவில் வங்கிக்கு அருகிலும், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் செல்லக்கூடிய சாலையிலும் அமைந்துள்ளதால் பொதுமக்களுக்கும் – வியாபாரிகளும் மிகப்பெரிய இடையூறாக இருப்பதால் இந்த கடையை மூட வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

ஆனால் இது குறித்து எந்த நடவடிக்கும் எடுக்காததை கண்டித்து இந்திய மார்க்ஸிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி தலைமையில் அண்ணா சிலையிலிருந்து ஊர்வலமாக வந்து கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்கார்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து கடையை அகற்றும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என கடையின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் நீடித்த இந்த போராட்டத்தில் சுமூக பேச்சுவார்த்தை ஏற்படாததையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். இதனால் ஒரத்தநாடு பகுதியில் ஒரு பதட்டமான சூழல் நிலவியது.
Leave a Reply
You must be logged in to post a comment.