நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் டார்கெட் 9 -பாஜக தலைவர் அண்ணாமலை.

2 Min Read
அண்ணாமலை

விருவிருப்பான அரசியல் சூழலில் பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை திடீரென ஒரு அறிவிப்பை வெளிட்டார்.தமிழகத்தில் அடுத்து நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வின் டார்கெட் 9 தொகுதிகள் தான் என்று.

- Advertisement -
Ad imageAd image

2024 தேர்தல் சூடு இன்னும் ஆரம்பிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் எல்லாம் வெறும் அரசியல் குற்றச்சாட்டுக்கள். மக்களவை தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது. நேரம் இருக்கிறது. அதற்கு முன்பாக நிறைய விஷயங்கள் பாஜக செய்ய வேண்டும். அதற்கான உள்கட்டமைப்புகளை மேற்கொள்ள வேண்டும்.

பாஜக தலைவர்

அதற்காகத்தான் போய்க் கொண்டு இருக்கிறோம். ஐந்து மாநில தேர்தல் நடக்க உள்ளது. அகில இந்திய கட்சியாக ஐந்து மாநிலத்தையும் பாஜக பார்க்கிறது . மூன்று மாநிலங்கள் இந்தி ஹார்ட்லேண்டில் உள்ளது. மிசோரம் உள்ளது. தெலுங்கானா உள்ளது. எனவே இன்றைக்கு அதற்கான மக்களவை தேர்தல் அவசரம் இல்லை. அகில இந்திய தலைமை 9 தொகுதிகளில் சிறப்பு கவனம் கொடுக்கிறார்கள் என்பதை தாண்டி முக்கியமான தொகுதிகள் வெளியே உள்ளது. அந்த 9 என்பது இதுதான் பாஜக கவனம் செலுத்துவது இல்லை. அதைவிட முக்கியமான தொகுதிகள் வெளியே உள்ளது.

அந்த ஒன்பது எதற்கு என்றால் சிறப்பு கவனம் கொடுத்து முன்னேற்றம் பண்ன வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது தொகுதிகள். அந்த 9ல் இல்லாத தொகுதிகளில் அதை விட சிறப்பாக வேலை நடந்து கொண்டு இருக்கிறது. ஒன்பது தொகுதிகள் எதற்கு என்றால் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அதற்காக ஒன்பது தொகுதிகள்தான் என்பது இல்லை.

பத்திரிகையாளர் சந்திப்பு

இன்னும் ஒரு 10 நாளில் பார்க்க போகிறீர்கள். அதே வேலையை 39 தொகுதிகளிலும் பார்க்க போகிறீர்கள். 39 தொகுதிகளுக்கும் மத்திய அமைச்சர்கள் வருவார்கள். பார்ப்பார்கள்..தேர்தலுக்கு தயார்படுத்துவதற்காக… அந்த 9 தொகுதிகள்தான் முக்கியமானது என்று கிடையாது. அதைவிட முக்கியமான தொகுதிகள் உள்ளன. தேர்தலுக்கு 7,8 மாதங்கள் இருப்பதால் வேட்பாளர் தேர்வு என்பது இன்றைக்கு முக்கியம் இல்லை. நாட்கள் அதிகமாக உள்ளது.

அரசியல் சூழல் மாறும்..களச்சூழல் மாறும். 5 மாநில தேர்தல் நமக்கு முக்கியம். தமிழ்நாட்டில் நிறைய பிரச்சினைகளை சமாளிக்க வேண்டும். கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் இன்று இரண்டு விஷயங்கள் நடந்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் 15-க்கும் மேற்பட்ட சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் 5,6 நாட்களாக சோதனை நடக்கிறது. கைப்பற்றப்பட்ட பணமும் அதிக அளவு உள்ளது.

அண்ணாமலை

இன்னும் அதிகாரப்பூர்வமாக நமக்கு பிரஸ் நோட் கொடுக்கவில்லை. நாம் கருத்து சொல்ல முடியாது. தமிழகத்தில் எந்த அளவுக்கு பொது பணம், தனிநபர் பணமாக மாறியிருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த அளவுக்கு மக்கள் வரிப்பணத்தில் அரசியல்வாதிகள் வாழ்வது புதிது அல்ல. இன்னைக்கு அமலாக்கத்துறையோ வருமான வரித்துறையோ மக்கள் மன்றத்தில் அதை வெட்டவெளிச்சமாக வெளியே வைக்கிறார்கள். இதை மக்களிடத்தில் எடுத்து கூறுவோம் இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article

Leave a Reply