பி.இ./ பி.டெக். / பி.ஆர்க்.‌ பட்டப் படிப்பிற்கு காண விண்ணப்பங்கள்‌இன்று முதல் பெறப்படுகிறது.

2 Min Read
மாணவர்கள்

முதலாமாண்டு பி.இ. பி.டெக்.  பி.ஆர்க்.‌ பட்டப் படிப்பிற்காண விண்ணப்பங்கள்‌ வழங்கப்பட்டு வருகின்றது .தமிழ்நாட்டில்‌ உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும்‌ பொறியியல்‌ கல்லூரிகள்‌,அண்ணா பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ அதன்‌ உறுப்புக்‌ கல்லூரிகள்‌ அண்ணாமலை பல்கலைக்கழகம்‌ மற்றும் சுயநிதி பொறியியல்‌ கல்லூரிகளால்‌ ஒதுக்கப்பட்ட  இடங்களுக்கான 2023- 24 ஆம்‌ கல்வியாண்டில்‌ சேர்க்கை பெற கீழ்க்கண்ட இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்ய ஏற்பாடு செய்யப்பட்‌டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

இணையதள வாயிலாக விண்ணப்பிக்கும் முறை

மாணவர்கள் https://www.tneaonline.org அல்லது https://www.tndte.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பங்கள்‌ பதிவு செய்யவேண்டும்‌.

பி.இ./ பி.டெக். / பி.ஆர்க்.‌ பட்டப் படிப்பிற்கு காண விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள்‌, தங்களின்‌ விண்ணப்பத்தை சமர்ப்பிக்க எதுவாக தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை சேவை மையம்‌- TNEA Facilitation Centers (TFCs) அனைத்து மாவட்டங்களிலும்‌ அமைக்கப்பட்டுள்ளது. அதன்‌ விவரங்கள்‌ மேற்காணும்‌ இணையதளத்தில்‌ கொடுக்கப்பட்டுள்ளது.

இணையதளம்‌ மூலமாக விண்ணப்பங்கள்‌ பதிவு செய்யும்‌ நாள்‌:
துவங்கும்‌ நாள்‌: 05.05.2023 முடிவுறும்‌ நாள்‌: 04.06.2023

பதிவுக்‌ கட்டணத்தை விண்ணப்பதாரர்‌ டெபிட் கார்டு / Credit Card / நெட் பேங்க்கிங் இணையதள வாயிலாக செலுத்தலாம்‌. இணையதள வாயிலாக பதிவுக்‌ கட்டணத்தை செலுத்த இயலாத மாணாக்கர்கள்‌, ” “The Secretary TNEA” payable at Chennai.. என்ற பெயரில்‌ 05.05.2023 அன்றிலிருந்து பெற்ற வரைவோலையை பதிவுக்‌ கட்டணமாக தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை சேவை மையம்‌ (TFCs) வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்கலாம்‌.

கட்டணம்- ஓசி, பிசி, பிசிஎம், எம்பிசி- ரூ.500
எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி- ரூ.250.

கலந்தாய்வு விவரங்கள்‌, வழிகாட்டி மற்றும்‌ கால அட்டவணையை மாணாக்கர்கள்‌ மேற்காணும்‌ இணையதள வாயிலாக மட்டுமே அறிந்துகொள்ளலாம்‌.

மாணக்கர்கள்‌ இணையதளம்‌ வாயிலாக தங்களுடைய விண்ணப்பத்தினை பதிவு செய்யும்‌பொழுதே அசல்‌ சான்றிதழ்களை இணையதளம்‌ வாயிலாக சரிபார்க்கும் பொருட்டு, தங்களுக்கு விருப்பமான தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை சேவை (TFC) மையத்தினை தேர்வு செய்துகொள்ள வேண்டும்‌.

மேற்கண்ட அசல்‌ சான்றிதழ்களை இணையதள வாயிலாக சரிபார்க்கும்போது எதேனும்‌ குறைபாடுகள்‌ கண்டறியப்பட்டால்‌, அந்த குறிப்பிட்ட மாணாக்கரின்‌ பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்‌ மற்றும் மின்னஞ்சல்‌ முகவரிக்கு அனுப்பப்படும்‌ குறிப்பிட்ட தேதி மற்றும்‌ நேரத்தில்‌ டிஎஃப்சி மையத்திற்கு நேரடியாக வந்து சரிசெய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான அசல்‌ சான்றிதழ்‌ சரிபார்ப்பு சென்னையில்‌ நேரடியாக நடைபெறும்‌.

தொடர்பு எண்‌: 044 – 2235 1014 / 1015
அழைப்பு எண்‌: 1800 – 425 – 0110

இ- மெயில் முகவரி: tneacare@gmail.com

Share This Article

Leave a Reply