ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை திறந்துவைத்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஏவிஎம் ஸ்டுடியோ வளாகத்தில் உபயோகத்திலிருந்த பழைய மற்றும் காலத்திற்கேற்ப மாறிய திரைப்படத் தயாரிப்புக் கருவிகளையும், மிகப் பழமையான பாரம்பரியமிக்க கார்கள் மற்றும் இரு சக்கரவண்டிகளையும் கொண்ட ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை முதலமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதனையடுத்து ஏவிஎம் புரொடக்ஷன்ஸ்-இன் பார்ட்னர் மற்றும் கிரியேட்டிவ் இயக்குனர் அருணா குகன், ஏவிஎம் ஹெரிடேஜ் முயூசியம் திறப்பதற்கு பல்வேறு பணிகளுக்கிடையே எங்கள் அழைப்பை ஏவிஎம் ஸ்டுடியோஸ் வந்திருந்து முயூசியத்தை திறந்து வைத்து பார்வையிட்டு எங்களுக்கு ஊக்கமளித்த மாண்பு மிகு தமிழ்நாடு முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஏவிஎம் குடும்பதினர் சார்பில் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் எனக் கூறினார்.
இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,”தமிழ்நாட்டின் திரைவரலாறு என்பது சமூக வரலாற்றோடும் அரசியல் வரலாற்றோடும் பின்னிப் பிணைந்தது. அதில் avm productions இன் பங்கு தலையாயது; தவிர்க்க முடியாதது!
இந்தியத் துணைக்கண்டத்தில் சினிமாவின் பரிணாம வளர்ச்சியை AVM இல்லாமல் எழுதிவிட முடியாது.
நீண்ட திரை வரலாற்றை, தொழில்நுட்ப வளர்ச்சிகளை எடுத்துக்காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள AVM Heritage Museum-இல் நமது சமூக வரலாறும் அடங்கியிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.