தமிழ் மக்களின் காவலாளி போராளி என்று மார்தட்டிக் கொள்ளும் திமுக அரசு இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்படும் போது என்ன செய்து கொண்டிருந்தது . என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார் .
இன்று கமலாலயத்தில் திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்ட , அண்ணாமலை , தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் துவக்கியது திமுக கட்சிதான் இலங்கைப் பிரச்சனை முள்ளிவாய்க்கால் பிரச்சனை நீட் தேர்வு ஹைட்ரோ கார்பன் என தமிழ்நாட்டில் நிலவும் அனைத்து முக்கிய பிரச்சனைக்கும் துவக்கக்காரர்களாக திமுகவினரை செயல்பட்டுள்ளனர்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் தமிழகத்தில் பிரச்சனையை துவக்குவது திமுக அந்தப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது பாஜக
இந்தியாவில் எந்த கட்சியும் செய்யாத அளவுக்கு திமுக ஊழல் செய்துள்ளது கரண்ட் தொட்டாச்சி பாதியிலேயே விட்டுட்டு போக முடியாது . எனவே திமுக போன்றே தமிழ்நாட்டில் செயல்படும் இன்னும் இரு கட்சிகளின் ஊழல் மூலம் சேர்த்த சொத்து பட்டியல்களை படிப்படியாக வெளியிட உள்ளேன்.

“என் மண் – என் மக்கள்” :
வருகிற ஜூன் முதல் வாரத்தில் என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை தொடங்க உள்ளேன் . இந்த நடைபயணம் முழுவதும் திமுகவினரின் ஊழல் சொத்துக்களை பற்றியே விளக்கமாக பேசப்போகிறேன் வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எனது இந்த நடைப்பயணத்திற்கான பலன் தெரிய வரும். தமிழகத்திலிருந்து பாஜகவை சார்ந்த சுத்தமான ஊழலற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களே 2024 தேர்தலுக்குப் பிறகு அதிகபடியாக இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார் .
Leave a Reply
You must be logged in to post a comment.