அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்ற அண்ணாமலையின் கருத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு..!

2 Min Read

2026-ல் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்ற அண்ணாமலையின் கருத்துக்கு பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முன்னதாக கோவையில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, “பாஜக மாநில தலைவராக நான் இருக்கும் வரை அதிமுகவுடன் கூட்டணி கிடையாது.

- Advertisement -
Ad imageAd image

பாஜக மாநில தலைவராக வேறு ஒருவரை கொண்டு வந்தால் தான் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடியும்,”என்று கூறி இருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன்;-

அதிமுக

“தென் சென்னை மக்கள் ஒரு நல்ல வேட்பாளரை தேர்வு செய்யவில்லை என்பதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன். தென் சென்னையில் அரசியல் சார்பற்று சேவை செய்ய வேண்டும் என்ற இளைஞர்கள் என்னோடு இணையலாம்.

தென் சென்னையில் நாங்கள் தேர்வு செய்யப்பட்டாலும், செய்யப்படவில்லை என்றாலும் நாங்கள் தான் நாடாளுமன்ற உறுப்பினர். மக்கள் சேவையில் தென் சென்னை வேட்பாளரெல்லாம் என் பக்கத்தில் கூட நிற்க முடியாது.

அதிமுக, பாஜக கூட்டணி அமைத்திருந்தால் நிறைய இடங்கள் வென்றிருக்கலாம் என அதிமுக தலைவர்கள் இப்போது சொல்கின்றனர். நாங்களும் சொல்கிறோம். அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் வெற்றி கிடைத்திருக்கும் என்பதை ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும்.

பாஜக

அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்திருந்தால் திமுகவுக்கு தற்போது கிடைத்துள்ள இடங்கள் கிடைத்திருக்காது. 2026-ல் என்ன கூட்டணி என்பதை இப்போது என்னால் கூற முடியாது. 2026-ல் அதிமுகவுடன் கூட்டணி உண்டா? இல்லையா? என்பதை அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும்.

எவ்வளவு கிண்டல் செய்தாலும் தமிழ்நாட்டில் தாமரை மலரத்தான் செய்யும். அதிமுக உட்கட்சி விவகாரம் பற்றி நான் கருத்து கூற முடியாது. அதிமுகவின் உட்கட்சிப் பிரச்சனை அண்ணாமலைக்கு எப்படி தெரியும் என்று எனக்கு தெரியாது.

அண்ணாமலை

அண்ணாமலை பேசியது அவருடைய கருத்து, அதுபற்றி அவரிடமே ஊடகங்கள் கேட்கலாம். அண்ணாமலை அவர் கருத்தை சொல்ல உரிமை உண்டு என்பதைப் போல எனது கருத்தை கூற எனக்கு உரிமை உள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அயல்நாட்டு சக்திகள் பணியாற்றியுள்ளன.

பாஜக ஐடி விங் மற்றும் வார் ரூம் இளைஞர்கள் கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் மாநில தலைவராக எச்சரிக்கின்றேன். உட்கட்சி தலைவர்களையே விமர்சிக்கும் பாஜக இணையதளவாசிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்ற அண்ணாமலையின் கருத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு

தன்னைப் பற்றி அவதூறு பரப்பினால் அண்ணாமலை ஆதரவாளர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். பலம் பொருந்திய எதிர்க்கட்சியான அதிமுக ஒன்றுபட்டு செயல்பட்டால் நல்லது தான். ஆளுநர் பணியை விட்டு விட்டு வந்ததற்கு நானே கவலைப்படவில்லை. உங்களுக்கு என்ன கவலை?” என்றார்.

Share This Article

Leave a Reply