புதுவைக்கு துணை நிலை ஆளுநராக பொறுப்பு வகிக்கும் தமிழிசையை நீக்கி விட்டு விரைவில் புதிய ஆளுநர் நியமன அறிவிப்பு வெளியாகும் என பாஜக வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுவையின் துணை நிலை ஆளுநராக கூடுதலாக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில், ஆளுநர் பதவி அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து கிரண்பேடி மாற்றத்துக்கு பின் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் பதவி அவர் ஏற்றுக் கொண்டார். சமீப காலமாக அவர் அரசியல் கட்சிகளை மக்கள் பிரதிநிதிகளை விமர்சிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ள நிலையில் அவரது பதவி காலம் விரைவில் முடிவடைய உள்ளதால் மீண்டும் தேர்தலில் களம் இறங்க திட்டமிட்டுள்ளாரா? என்ற பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் இணைந்துள்ளது. இந்த நிலையில் அவர் தனது பேஸ்புக் வலைதளத்தில் ஒரு பெண்ணின் சபதம் என்னும் வார்த்தையை பதிவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து மீண்டும் அரசியலில் குதிக்க போகிறீர்களா? என கேள்வி எழுப்பி உள்ளனர். இது குறித்து பாஜக மூத்த நிர்வாகிகள் கூறுகையில்; ஆளுநரின் பதவி காலம் முடிவடையும் நிலையில் உள்ளது. தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தவருக்கு ஆளுநர் பதவி கிடைத்தது. அதனை தொடர்ந்து ஓய்வு பெறுவதை அவரது மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. மீண்டும் அரசியலில் ஈடுபட ஆரம்பமாக உள்ளார். இதற்காக தமிழகத்தில் ஆளும் அரசுக்கு எதிராக பேசினால் மீண்டும் அரசியலில் ஈடுபட பிரதமர் மோடி அமித்ஷா உத்தரவிடுவார்கள் என எதிர்பார்க்கிறார். இதனிடையே புதுச்சேரி துணை நிலை ஆளுநரான தமிழிசை விரைவில் மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக மத்திய சேர்ந்த பாஜக மூத்த தலைவர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார். அதற்கான அறிவிப்பு மூன்று நாளுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் தூத்துக்குடி, வட சென்னை மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிட பாஜக தலைமையிடம் தமிழிசை கோரிக்கை வைத்து வருவதாக தெரிகிறது.

யாரும் எதிர்பாராத முடிவு தான் பாஜக தலைமை எடுக்கும். இதுபோன்று துணை நிலை ஆளுநர் மாற்றத்திற்கு பின் தலைமை செயலர் ராஜுவ் வர்மாவையும் இடமாற்றம் செய்யும் உத்தரவும் ஒன்றிய அரசிடமிருந்து எந்த நேரத்திலும் பிறப்பிக்கப்படலாம். அவருக்கு பதிலாக வட மாநிலத்தை சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான குப்தா அல்லது சஞ்சீவ் குமார் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்றனர். இந்த நிலையில் தமிழிசை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளாரா? அல்லது நீக்கப்பட உள்ளாரா? என்ற பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.