வட கிழக்கு மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் மாணவர்களை பெற்றோர்கள் நம்பி அனுப்புவார்கள் தமிழகம் பாதுகாப்பாக இருக்கும் என ஆளுநர் பெருமிதம்.
சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் தேசிய ஒருமைப்பாட்டு முகாம் துவக்க விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றம் நடைபெற்றது. அனைத்து மாநில கலாச்சாரத்தை கண் முன் கொண்டு வரும் வகையில் அவரவர் பாரம்பரிய உடையணிந்து மாணவர்களின் அணிவகுப்பு காட்சிப்படுத்தப்பட்டது. ஆளுநர் அதனை கண்டு களித்தார்.

பின்னர் நிகழ்வில் பேசிய அவர் வட கிழக்கு மாநிலத்தில் இருக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கல்வி கற்க தமிழகத்திற்கு வரும் போது மகிழ்ச்சியடைவார்கள் பெண்களை நம்பி அனுப்புவார்கள். இங்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதாலும், தமிழக மக்கள் நட்பாக பழகி உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள் என ஆளுநர் பெருமிதமாக பேசினார். மேலும் இங்கு பங்கேற்ற அனைவரும் ஒருங்கிணைந்து சமூக வலைதளங்கள் மூலம் ஒரு நட்புறவை ஏற்படுத்திக் கொண்டு பயனுள்ளதாக இருக்கும் என கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.