தண்ணீரில் மூழ்கிய சென்னை.இதனை பார்வையிட மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்று தமிழகத்திற்கு மழை வெள்ள பாதிப்புகளை சென்னை வந்திருந்தார்.அப்போது புயல் வெள்ள பாதிப்பு விவரங்கள் குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார்.உடன் அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் இருந்தனர்.
பின்னர் மிஜ்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிடுவதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்தவர். ராணுவ ஹெலிகாப்டரில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட புறபட்டார். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

பிற்பகல் 12.20 மணி முதல் 1.10 மணிவரை பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர்கள் பார்வையிட்டனர். மழை பாதித்த பகுதிகளை சுமார் 30 நிமிடங்கள் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டரில் பறந்தபடி சென்னையின் பல பகுதிகளையும் ஆய்வு செய்தார்.அப்போது பாதிப்புகள் குறித்து அருகில் இருந்தவர்களிடம் கேட்டறிந்தார்.பின்னர் அங்கிருந்து கார் மூலம் தலைமைச் செயலகத்திற்கு வந்த அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது புயல் வெள்ள பாதிப்பு விவரங்கள் குறித்து ராஜ்நாத் சிங்கிடம் முதலமைச்சர் எடுத்துரைத்தார். அதன்பின்னர் மத்திய அமைச்சருக்கு புயல் பாதிப்பு குறித்தும், நிவாரணப் பணிகள் குறித்தும்,மழையின் போது ஏற்பட்ட பாதிப்புகள்,மக்களை மீட்டது முதல் வீடியோ காட்சி மூலம் விளக்கமளிக்கப்பட்டது.பாதிப்புகள் அனைத்தையும் கேட்டறிந்த அவர் முழு விவரங்களையும் சேகரித்துக்கொண்டார்.தமிழக முதல்வர் நிவாரனம் வழங்க ஏற்கனவே பிரதமர் மோடியிடம் 5000 கோடி கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ராஜ்நாத் சிங் கூறியதாவது: நான் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன். தொடர்ந்து முதலமைச்சரைச் சந்தித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினேன்.
தமிழகத்திற்க்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். தமிழக மக்களின் நல்வாழ்வுக்கு இந்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை பிரதமர் சார்பாக உறுதியளிக்கிறேன். சென்னை மீண்டு வர தேவையான அனைத்து நிவாரண உதவிகளும் விரைந்து வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு விரைவில் வர உள்ளதாகத் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.