தமிழக – கேரள எல்லையான வளையார் சோதனை சாவடியில் சோதனையின் போது ஆடையில் நூதன முறையில் 14 லட்சம் ரூபாய் மறைத்து வைத்து எடுத்து நபரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து கேரள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தமிழக கேரள எல்லைப் பகுதியில் தீவிர வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனால் இரண்டாம் கட்டமாக கேரளாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கேரள அதிகாரிகள் மாநில எல்லைகளில் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக – கேரள எல்லையான வாளையார் சோதனை சாவடியில் கேரள பேருந்துகளில் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோவையில் இருந்து திருச்சூருக்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணிகளிடம் சோதனையை மேற்கொண்டனர்.

அந்த பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த எர்ணாகுளம் ஜெராகி பகுதியைச் சேர்ந்த வினோ என்பவரை பரிசோதித்த போது அவரது ஆடையில் ரகசிய பாக்கேட் அறைகள் தயார் செய்யப்பட்டு, கட்டு கட்டாக பணம் மறைத்து வைத்திருந்தது சோதனையில் தெரியவந்தது.

அப்போது அந்த பணத்திற்கு முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அவரை பேருந்தில் இருந்து இறக்கி விசாரணையை மேற்கொண்டனர்.
அப்போது அவர், உடலில் மறைத்து வைத்திருந்த 14 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், பணத்தை எங்கு கொண்டு சென்றார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் 10 லட்ச ரூபாய்க்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் கேரள மாநிலம் வாளையார் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Leave a Reply
You must be logged in to post a comment.