தமிழ்நாடு கருணாநிதி மருமகன் முரசொலி செல்வம் மறைவு: ஸ்டாலின்- பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி.

1 Min Read
  • சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் மைத்துனரும், தி.மு.க. ,வின் , ‘முரசொலி’ முன்னாள் ஆசிரியருமான முரசொலி செல்வம் , உடல்நலக்குறைவு காரணமாக, பெங்களூருவில், வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 84.
    செல்வத்தின் உடல் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு மாலை வந்தது. உடலைக் கண்டு மனம் உடைந்த ஸ்டாலினை, அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் ஆறுதல் கூறினர் .

திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், ம.தி.மு.க நிறுவனர் வைகோ உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், உடைந்து போனதாக கூறியுள்ளார். தந்தை கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு தான் சாய்ந்த தோள் செல்வத்தின் தோள் என்று கூறினார். சிறுவயதில் இருந்தே எனக்கு வழிகாட்டியாக இருந்து, கட்சிப் பணிகளில் வழிகாட்டி, நெருக்கடியான நேரத்தில் சரியான தீர்வுகளை முன்வைத்து, எனது வளர்ச்சிக்கு தோளோடு தோள் நின்றவர் முரசொலி செல்வம்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது சித்தப்பாவின் மரணம் குறித்து அதிர்ச்சி தெரிவித்தார்.

- Advertisement -
Ad imageAd image

திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், ம.தி.மு.க நிறுவனர் வைகோ உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், உடைந்து போனதாக கூறியுள்ளார். தந்தை கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு தான் சாய்ந்த தோள் செல்வத்தின் தோள் என்று கூறினார்.

கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/on-the-occasion-of-navratri-kolu-exhibition-by-the-members-of-vasavi-womens-association/

 

சிறுவயதில் இருந்தே எனக்கு வழிகாட்டியாக இருந்து, கட்சிப் பணிகளில் வழிகாட்டி, நெருக்கடியான நேரத்தில் சரியான தீர்வுகளை முன்வைத்து, எனது வளர்ச்சிக்கு தோளோடு தோள் நின்றவர் முரசொலி செல்வம்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது சித்தப்பாவின் மரணம் குறித்து அதிர்ச்சி தெரிவித்தார்.

Share This Article

Leave a Reply