தமிழக ஆளுநர் திமுக அரசை விமர்சனம் செய்யும் விதமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டு திமுகவினரால் வைக்கப்படுகிறது.குறிப்பாக சனாதனம் பற்றிய சர்ச்சை ஆளுநர் திமுகவினரிடையே தொடர்ந்து இருந்து வருகிறது.அதே போன்று அமைச்சரவையில் திமுக நிறைவேற்றும் தீர்மானங்களுக்கு தொடர்ந்து ஆளுநர் கையெழுத்திடாமல் புறக்கணித்து வருவது திமுகவினரிடையே ஆளுநர் மீது நம்பிக்கை இழக்க செய்வதாக திமுகவினர் கருதுகின்றனர்.அதனை தொடர்ந்து ஆளுநர் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் போலவே செயல்படுவதாக திமுக கூட்டணி கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

குறிப்பாக இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் மூத்த பொதுவுடமை இயக்க தலைவருமான சங்கரையாவிற்க்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க தமிழக அரசு முடிவெடுத்து அமைச்சரவை மூலம் ஆளுநருக்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பிய நிலையில் ஆளுநர் இது வரை கையெழுத்திடாமல் தவிர்த்து வருவது மேலும் திமுகவினரை ஆத்திரப்பட செய்துள்ளது.இப்படி பல நடவடிக்கைகள் திமுகவினருக்கு எதிராக செயல்படுவதாக கருதுகின்றனர் திமுகவினர்.
இந்த நிலையில் தமிழகத்தில் திமுகவினர் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல்வேறு கட்ட ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தி வருகின்றனர், இதை அடுத்து பொள்ளாச்சி நகர திமுக சார்பில் நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழக கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆஎ.எஸ்.எஸ் உறுப்பினர் போல செயல்படுவதால் தமிழக கவர்னருக்கு ஆர்.எஸ்.எஸ் உடைகள் மூன்று பார்சல் செய்து ராஜ் பவனுக்கு விரைவுத்தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.

தமிழக கவர்னர் தமிழக மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு தொடர்ந்து தமிழகத்திற்கும் தமிழினத்திற்கும் தமிழ் சித்தாந்தத்திற்கு எதிராக கவர்னர் கருத்து தெரிவித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்கள் முன்பு திராவிடம் என்ற இனம் இல்லை என பேசியுள்ளார்.இது மேலும் திமுகவினரை கோபப்படுத்தியுள்ளது. தொடர்ந்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஆர் எஸ் எஸ் சித்தாந்தம் பேசி வரும் அவருக்கு தமிழக மக்களின் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர் என்றும் ஆர்எஸ்எஸ் காரர் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக பொள்ளாச்சி நகர திமுக சார்பில் சென்னையில் கவர்னர் இருக்கும் ராஜ் பவனுக்கு ஆர். எஸ் . எஸ் உடை அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தனர். நகரத் துணைச் செயலாளர் தர்மராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.