சென்னை எண்ணூரில் எண்ணெய் கசிவை தொடர்ந்து, வாயு கசிவும் ஏற்பட்டுள்ளது. சென்னை எண்ணூரில் பெரியகுப்பம் அருகே கோரமண்டல் என்ற தனியார் நிறுவனம் கப்பல்களிலிருந்து திரவ அம்மோனியா கொண்டு வர கடலுக்கடியில் பதித்துள்ள குழாய்களில் வாயு கசிவு சின்னகுப்பம், பெரியகுப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் அகிய பகுதிகளை சேர்ந்த பலருக்கும் பாதிப்பு. 30-க்கும் மேற்பட்டோர் மயக்கம், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பெரிய குப்பம் சின்ன குப்பம் கிராமத்திலிருந்து 100 -க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். தனியார் தொழிற்சாலையில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. கடலிற்கு செல்லும் குழாயில் ஏற்பட்ட ஓட்டை காரணமாக வாயு கசிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்த 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை எண்ணூரில் எண்ணெய் கசிவை தொடர்ந்து வாயு கசிவை உறுதி செய்தது மாசு கட்டுப்பாடு வாரியம் என தெரிவிக்கப்பட்டது. சென்னை, எண்ணூர் கடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கோரமண்டல் தொழிற்சாலையின் திரவ அமோனியம் எடுத்து வரும் குழாயிலிருந்து அமோனியா வாயு கசிந்ததை மாசு கட்டுப்பாடு வாரியம் உறுதி செய்தது. ஆலை வாசலில் காற்றில் 400 microgram/m3 ஆக இருக்க வேண்டிய அமோனியா, 2090 microgram/m3 ஆகவும், கடலில் 5 mg/L ஆக இருக்க வேண்டிய அமோனியா, 49 mg/L இருப்பதாகவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே குழாயை இனி இயக்க வேண்டும் என மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவு அளித்தனர்.

சென்னை எண்ணூரில் கோரமண்டல் ஆலை கடலில் அமைத்துள்ள திரவ அமோனியா வாயு எடுத்து வரும் குழாயிலிருந்து அமோனியா கசிந்ததை மாசு கட்டுப்பாடு வாரியம் உறுதி செய்துள்ளது. எண்ணூரில் கோரமண்டல் நிறுவனத்தின் குழாயிலிருந்து அமோனியா, பாஸ்பேட், பொட்டாஸ், சல்பேட் கசிந்ததை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உறுதி செய்துள்ளது. சென்னை எண்ணூர் கோரமண்டல் நிறுவனத்தில் நேற்று இரவு கசிந்த வாயு காரணமாக 6 பேர் மருத்துவமனையில் அவசர தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்றும், நிறுவனம் தொடர்ச்சியாக செயல்பட்டு வருவதை கண்டித்து சென்னை எண்ணூர் பொதுமக்கள் 20 நபர்கள் நிறுவனத்தின் வாசலில் போராட்டம் செய்து வருகின்றனர்.
Kodomai