பாரத பிரதமரின் 9 ஆண்டு கால சாதனையை விளக்கும் வகையில் தஞ்சையில் பா.ஜ.க மாநிலச்செயலாளர் கருப்பு. எம்.முருகானந்தம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காவிரியில் மேகதாதுவில் அணை கட்டுவோம் என காங்கிரஸ் அரசு கூறி வருகிறது. இந்த அரசின் பதவியேற்பு விழாவில்தான் தமிழக முதல்வர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ், பாஜக என எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் மேகதாதுவில் அணை கட்ட தமிழக பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. இதேபோல மத்திய அரசும் அனுமதி தராது என்றார். கர்நாடகத்தில் பாஜக ஆட்சியில் மேகதாதுவில் அணை கட்ட முயற்சி நடத்தபோது, அதை எதிர்த்து தமிழ்நாட்டில் தமிழக பாஜக போராட்டம் நடத்தியது.
இதேபோல காங்கிரஸ் அரசும் மேகதாதுவில் அணை கட்ட முயன்றால், தமிழக பாஜக போராட்டம் நடத்தும், காவிரியில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையத்தை பிரதமர் மோடி அமைத்தார். மத்திய அரசில் பிரதமர் மோடி பொறுப்பேற்று 9 ஆண்டு கால ஆட்சியில் ஏழை, எளிய மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். இதன் மூலம் உலகப் பொருளாதார வல்லரசு நாடுகளில் ஐந்தாவது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது.
குடும்ப ஆட்சி, வாரிசு ஆட்சி, ஊழல் உள்ளிட்டவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். எனவே, வருகிற 2024 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் முன்னேற்றத்துக்காக அல்லது ஊழலுக்கா என்பதை மக்கள் சிந்தித்து பார்த்து வாக்களிக்க வேண்டும் என்றார் கருப்பு முருகானந்தம். கேட்டுக் கொண்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.