தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025-26 Minister MRK Paneerselvam தாக்கல் !

உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீட்டுக்கு எடுத்துச் சென்று வழங்கிட உள்ளூர் இணைய வர்த்தகத்துடன் இணைக்கப்படும்.

3 Min Read

2025 – 26ம் ஆண்டிற்கான வேளாண் மற்றும் உழவர் நலத்துறைக்கான நிதிநிலை அறிக்கையை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று இன்று (மார்ச் 15) காலை சரியாக 9.30 மணியளவில் தாக்கல் செய்தார் .தமிழக பட்ஜெட் உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்.

- Advertisement -
Ad imageAd image

வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான “டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி” உருவாக்கப்படும்.

உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும்

100 முன்னோடி விவசாயிகளை நெல் உற்பத்தித்திறனில் சாதனை அடைந்துள்ள ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

ரூ.42 கோடியில் 1,000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும்.

மானாவாரி நிலங்களில் 3 லட்சம் ஹெக்டேரில் கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2,000 மானியம் வழங்கப்படும்.

முந்திரி பருப்பு , உற்பத்தியை அதிகரிக்கவும், முந்திரி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும், முந்திரி தொழில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கவும் தமிழ்நாடு முந்திரி வாரியம் ரூ.10 கோடியில் அமைக்கப்படும்.

வெங்காயத்தின் விளைச்சல் குறையும் காலங்களில் சந்தைக்கு நிலையான வரத்தினை உறுதிப்படுத்திடும் பொருட்டு வெங்காய சேமிப்புக்கூடங்கள் ரூ.18 கோடியில் அமைக்கப்படும்.

கோடைகாலங்களில் சாகுபடிக் குறைவால் ஏற்படும் காய்கறிகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்திடவும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்திடவும் முக்கிய காய்கறிகளை ஏப்ரல், மே மாதங்களில் சாகுபடி செய்திட ரூ.10.50 கோடி ஒதுக்கீடு .

ரூ.1.35 கோடியில், காலநிலை மாற்றத்தினால் விவசாயம் மற்றும் சுற்றுசூழலில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள திறனுடைய கிராமங்கள் உருவாக்கப்படும்.

ரூ.68 கோடியில் 51 நீர்வடிப்பகுதிகளில் 30,190 ஹெக்டேர் பரப்பில் தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் நீர்வடிப்புப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்படும்.

சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரையில் உயிர்ம வேளாண் விளைபொருட்களுக்கு தர நிர்ணய ஆய்வகங்கள் ரூ.6.16 கோடியில் அமைக்கப்படும்

விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு (FPO) ரூ.10 லட்சம் வரை பொருளீட்டு கடன் வழங்கப்படும்.

வட்டாரங்கள் தோறும் தேர்வு செய்யப்பட்ட பொது சேகரிப்பு மையங்களில் வேளாண் விளைபொருட்கள் வர்த்தகம் செய்யப்படும்.

உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீட்டுக்கு எடுத்துச் சென்று வழங்கிட உள்ளூர் இணைய வர்த்தகத்துடன் இணைக்கப்படும்.

ரூ.8 கோடியில் தமிழ்நாட்டில் அதிக வரத்துள்ள 50 உழவர் சந்தைகளில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

மின்னணு தேசிய வேளாண் சந்தையுடன் (eNAM) 56 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் ரூ.39.20 லட்சம் ஒதுக்கீட்டில் ஒருங்கிணைக்கப்படும்.

ரூ.20 கோடியில் 9 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் தலா 1000 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும்.

நல்லூர் வரகு (கடலூர்), வேதாரண்யம் முல்லை (நாகப்பட்டினம்), நத்தம் புளி (திண்டுக்கல்), ஆயக்குடி கொய்யா (திண்டுக்கல்), கப்பல்பட்டி கரும்பு முருங்கை (திண்டுக்கல்) ஆகிய 5 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற ரூ.15 லட்சம் ஒதுக்கீடு.

ரூ.50 கோடியே 79 லட்சத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

ரூ.50 கோடியில் வேளாண் விளைபொருட்களுக்கான 100 மதிப்புக்கூட்டு மையங்கள் அமைக்கப்படும்.

ரூ.1.84 கோடியில் 300 கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும்.

ரூ.2.50 கோடியில் திறந்தவெளி பாசன கிணறுகள் புனரமைக்கப்படும்.

ரூ.2.75 கோடியில், வேளாண்மைப் பொறியியல் துறை இயந்திரங்களைப் பயன்படுத்தி, 500 நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை தூர் வாருதல் மற்றும் 100 புதிய மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.

புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்கிட, பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்றிட 1000 விவசாயிகளுக்கு மானியம் வழங்கிட ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

63,000 ஆயிரம் மலைவாழ் விவசாயிகள் பயன் பெரும் வகையில் 22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு மலை வாழ் உழவர் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.

வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் மாதம் 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் முகாம் நடத்தப்படும்.

மின்சார இணைப்பு இல்லாத 1000 விவசாயிகளுக்கு தனித்துச் சூரியசக்தியால் இயங்கக்கூடிய பம்புசெட்டுகள் வழங்க ரூ.24 கோடி ஒதுக்கீடு

காவேரி, வெண்ணாறு, வெள்ளாறு வடிநிலப்பகுதிகளிலும், கல்லணை கால்வாய்ப் பாசானப் பகுதிகளிலும் உள்ள ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு வாய்க்கால்களில் ரூ.13.80 கோடியில் தூர்வாரும் பணிகள் நடத்தப்படும். உள்ளிட்டவைமுக்கிய அறிவிப்புகள் 2025-26  ஆண்டு வேளாண் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன

Share This Article

Leave a Reply