மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த கார்த்திகை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம். அங்காளம்மன் கோவிலில் நள்ளிரவில் கொட்டும் பனியிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம். அங்கு விசேஷ தீபாராதனையுடன் ஊஞ்சல் தாலாட்டு துவங்கியது. கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் இரவு நடைபெற்ற கார்த்திகை மாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம், நேற்று முன்தினம் இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதை முன்னிட்டு, அதிகாலையில் மூலவர் அங்காளம்மனுக்கு பால், தயிர், இளநீர், தேன், தங்க கவச அலங்காரம் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும், மகா ஆராதனையும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அங்காளம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது.

இதை தொடர்ந்து, உற்சவர் அங்காளம்மனுக்கு பலவித மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இரவு, 11:30 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில், சிவ வாத்தியங்கள், மேளதாளம் முழங்க, வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் அங்காளம்மன் எழுந்தருளினார். அங்கு விசேஷ தீபாராதனையுடன் ஊஞ்சல் தாலாட்டு துவங்கியது. கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மா தாயே அருள் புரிவாயே, என கரகோஷத்துடன் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.

அங்காளம்மன் கோவிலில் இரவு, 12:30 மணிக்கு, மகா தீபாராதனையுடன் ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்தது. கடும் பனியிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊஞ்சல் உற்சவத்தில் பங்கேற்றனர். ஊஞ்சல் உற்சவத்தின் போது ஊஞ்சல் மண்டத்திற்கு மொபைல் போன் எடுத்து வருவோர், கீழே உள்ள பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர். இதையடுத்து, நேற்று ஊஞ்சல் மண்டபத்திற்கு மொபைல் போன் கொண்டு செல்ல, இந்து சமய அறநிலையத் துறையினரும், போலீசாரும் தடை விதித்தனர். இதனால் ஊஞ்சல் மண்டபத்தில் ஓரளவு நெரிசல் குறைந்தது.
அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவத்தை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.