மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகித்த துணி வியாபாரி ஒருவர் தனது நண்பரின் கழுத்தை அறுத்து அவரது இரத்தத்தை குடிக்கும் வீடியோ காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது . இந்த கொடூர சம்பவம் கர்நாடக மாநிலம் சிக்கபல்லாப்பூரில் நடந்துள்ளது.
காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்ட விஜய் வயது 36 தனது மனைவி மாலாவுடன் சிந்தாமணி நகரத்தில் வசித்து வருகின்றனர் .
விஜய் , தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த மாரேஷ் வயது 34 என்பவருடன் சேர்ந்து , வாடகை ஆட்டோவில் வளையல் மற்றும் துணிகளை எடுத்து சென்று கிராமம் கிராமமாக வியாபாரம் செய்துள்ளனர் .
வியபார விஷயமாக அடிக்கடி விஜயின் வீட்டுக்கு வந்து சென்று கொண்டிருந்த மாரேஷ் விஜயின் மனைவி மாலாவுடன் அறிமுகம் ஏற்பட்டு , நன்கு சிரித்து பேசி , நட்பாக பழகி வந்துள்ளனர் . எனினும் , மாரேஷுக்கு தனது மனைவியுடன் தொடர்பு இருப்பதாக விஜய் சந்தேகப்பட்டார்.
விஜயின் சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்து வந்த நிலையில் , மாரேஷ் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார் , இதற்கு தனது மற்றொரு நண்பரான ஜான் பாபுவின் உதவியை நாடியுள்ளார் .
ஜூன் 19 ம் தேதி , இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க விஜய் தனது கூட்டாளியான , ஜான் பாபுவுடன் மாரேஷை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியான சிந்தாமணியில் உள்ள சித்தேபள்ளி கிராஸ் ரோட்டுக்கு அழைத்து சென்று , அவரது மனைவியுடன் தொடர்பில் உள்ளாரா என்று விசாரித்துள்ளார் . விரைவில் அவர்களுக்கான உரையாடல் வாக்குவாதமாக மாறியது .

ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற விஜய் , மாரேஷை கீழே தள்ளி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்துளார் . மேலும் அவரது கழுத்திலிருந்து வழிந்த ரத்தத்தை குடித்துள்ளார் . இந்த முழு சம்பவத்தையும் விஜயின் நண்பர் ஜான் பாபு தனது கைபேசியில் வீடியோ பதிவு செய்துள்ளார் .
மாரேஷ் இறந்துவிட்டால் தன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படும் என்று அஞ்சிய விஜய் , மாரேஷின் சகோதரருக்கு நடந்த சம்பவத்தை தெரிவித்து , அவரை மருத்துவமனையில் அனுமதித்துளார் .
பின்பு போலீசில் செல்லாமல் இருக்க மரேஷின் அண்ணனிடம் விஜய் சமாதான பேச்சிலும் ஈடுபட்டுள்ளார் .
சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆன நிலைமையில் , ஜான் பாபு பதிவு செய்திருந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ ஆரம்பித்தது .
இந்த வீடியோவின் அடிப்படையில் கர்நாடக மாநிலம் கெஞ்சர்லஹள்ளி போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாரேசிடம் புகார் பெற்று விஜய் மற்றும் அவரது கூட்டாளியான ஜான் பாபுவை கைது செய்தனர். போலீசார் விஜயிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மாரேஷ் தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக சந்தேகத்தின் காரணமாக அவரை கொலை செய்ய முயற்சி செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார் . இதனால் தான் மாரேஷின் கழுத்தை அறுத்து அவரது ரத்தத்தை குடித்ததாக விஜய் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
குற்றவாளி விஜய் மற்றும் ஜான் பாபுவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .
தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் , தனது நண்பரின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த வியபாரியின் சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது .
Leave a Reply
You must be logged in to post a comment.