நடிகர் சூர்யாவின் சூர்யா 42 படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தின் டைட்டில் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக ஏற்பட்டுள்ள நிலையில், படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி குறித்து தற்போது தயாரிப்புத் தரப்பு அப்டேட் தெரிவித்துள்ளது. சிங்கம் படங்களை தொடர்ந்து சூர்யா 42 படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். படத்தின் பாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் சூர்யா, திஷா பட்டானி, மிர்ணாள் தாக்கூர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரலாற்று பின்னணியில் உருவாகி வருகிறது இந்த சூர்யா 42 படம். கமர்ஷியல் படங்களையே தொடர்ந்து கொடுத்துவந்த சிவா, இந்தப் படத்தை எப்படி உருவாக்கியுள்ளார் என்பதை தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். படத்தின் டைட்டில் உள்ளிட்டவை குறித்த அப்டேட்டை தெரிந்துக் கொள்ளவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சூர்யாவின் கதைத்தேர்வு எப்போதுமே சிறப்பாக அமையும். சமீப காலங்களில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இவரது கதைத்தேர்வு மிகவும் சிறப்பாக அமைந்து வருகிறது.
சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் என அடுத்தடுத்த வெற்றிகளையும் அதன்மூலம் எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடையே கொடுத்து வருகிறார் சூர்யா. விக்ரம் படத்தில் 3 நிமிடமே வந்தாலும் தன்னுடைய அசுரத்தனமான நடிப்பால் ரசிகர்களை கட்டிப் போட்டார்.
இந்தப் படத்தின் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. முன்னதாக பாலா இயக்கத்தில் இணைந்திருந்த சூர்யா, அந்தப் படத்திலிருந்து விலகியது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இருந்தபோதிலும் சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் இணைந்தது குறித்து அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கமர்ஷியல் படங்களையே தொடர்ந்து கொடுத்துவந்த இயக்குநர் சிவா, இந்தப் படத்தில் எப்படி வரலாற்று பின்னணியில் எடுத்திருப்பார் என்பதையும் அறிய ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சூர்யா 42 படத்தின் ரிலீசுக்கு முந்தைய பிசினசும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. படத்தின் ஓடிடி, டிஜிட்டல் மற்றும் வெளிநாட்டு ரிலீஸ் உள்ளிட்டவை மிகப்பெரிய அளவிற்கு வியாபாரம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த வியாபாரம் விஜய்யின் லியோ படத்தையும் முந்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து படத்தின் டைட்டில் உள்ளிட்டவை குறித்து தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.