காரை ஓட்டிவந்தவருக்கு ஹெல்மெட் இல்லை என 1000 ரூபாய் அபராதம் சங்கரன்கோயில் போலீசார்.

2 Min Read
சொகுசு கார்

இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது விதி.ஆனால் சங்கரன்கோவில் தாலூக காவல்துறையினர் காரை ஓட்டி வந்த நபர் தலைக்கவசம் அணியவில்லை என ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.இது போன்ற செயலால் போலீசார் மீது நம்பிக்கை இழக்கும் பொது மக்கள்.

- Advertisement -
Ad imageAd image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சேர்ந்தமரம் வேலப்பநாடாரூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் கண்ணன் இவருக்கு சொந்தமான சொகுசு காருக்கு சில நாட்களுக்கு முன்பு தலைக்கவசம் அணியவில்லை என ஆயிரம் ரூபாய் விதிக்கப்பட்டதாக அவருடைய செல்போன் எண்ணிற்கு குறுஞ் செய்தி வந்துள்ளது. அதனை பார்த்து அதிர்ச்சியடைந்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

சுரேஷ் கண்ணன்

இது தொடர்பாக காரின் உரிமையாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது என்னுடைய கார் சங்கரன்கோவில் பகுதிக்கு வரவே இல்லை ஆனால் சங்கரன்கோவில் தாலூக காவல்துறையினர் அபராதம் விதித்தது வேதனையாக உள்ளதாக தெரிவித்தார்.

சங்கரன்கோவில் பகுதியில் வாகன தனிக்கையின் போது அதிகாரிகள் சம்பவ இடத்தில் இல்லாமல் காவலர்கள் அவர்களின் வேலையை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற நோக்கில் வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்யாமல் சாலையில் செல்லும் வாகனங்களின் எண்களை எழுதி வைத்து பின்னர் அபராதம் விதிப்பதனால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மேலும் அதிகாரிகள் காவலர்களுக்கு நாள் ஒன்றுக்கு இத்தனை வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என காவல்துறையினரை நிர்பந்தம் செய்வதானல் இது போன்ற தவறுகள் நடைபெற்று வருகிறது. எனவே மாவட்ட எஸ்பி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது காவலர்கள், பொதுமக்களின்; கோரிக்கையாகும்.

சங்கரன்கோவில் பகுதியில் சாலையில் செல்லாத வாகனங்களுக்கு காவல்துறையினர் தொடர்ந்து அபராதம் விதித்து வரும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. எனவே மெத்தனமாகவும் அலட்சியத்துடனும் செயல்பட்டு வரும் சங்கரன்கோவில் உட்கோட்ட காவல்துறையினர் புதிதாக பொருப்பேற்றுள்ள மாவட்ட எஸ்பி. சுரேஸ்குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாகும்.

நான்கு சகர வாகனம் ஓட்டாமலே இப்படி அபராதம் விதிப்பது எந்த விதத்தில் நியாயம்.போலீசார் கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காகவே இப்படி செய்கிரார்கள் என்றால் எப்படி ஏற்றுகொள்ள முடியும்.இது போன்ற செயல்கள் போலீசார் மீது பொ மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சிதைக்கும்.இதனை கண்டறிந்து போலீஸ் அதிகாரிகள் விரைந்து சம்பத்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Share This Article

Leave a Reply