தமிழ்நாட்டில் திறமையான வீரர்கள் இருந்தும் ஒருவரைக் கூட சிஎஸ்கே அணி தேர்வு செய்யவில்லை என பாமக எம்.எல்.ஏ குற்றச்சாட்டினார். தமிழர்களே இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாமக எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் விளையாட்டுத் துறை சார்பாக கோரிக்கை குறித்த விவாதங்கள் இன்று நடைபெற்றன. அதில், பேசிய பாமகவை சேர்ந்த தர்மபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். தமிழக அணி என்பது போல விளம்பரம் செய்து மக்களிடம் லாபம் பெறுவதாக அவர் குற்றச்சாட்டினார்.

தமிழகத்தில் திறமையான வீரர்கள் இருந்தும் ஒருவரைக்கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்யவில்லை என்றும் தமிழர்களே இல்லாமல் தமிழக அணி என்பது போல விளம்பரம் செய்து நம் மக்களிடம் லாபம் அடைகின்றனர் என பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் பேசினார்.
மேலும், தமிழர்களே இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தமிழ்நாடு அரசு தடைசெய்ய வேண்டும் என பாமக எம்எல்ஏ சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.