உலக விண்வெளி ஆய்வு மையத்தில் 9 மாதங்களாக சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், இன்று மெக்சிகோ வளைகுடாவில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளனர். விண்ணில் இருந்து பாய்ந்து வந்த ட்ராகன் விண்கலம் கடலில் பத்திரமாக தரையிறங்கி மிதந்த காட்சிகள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.கடந்தாண்டு ஜூன் மாதம் 5ம் தேதி வெறும் 8 நாள் மிஷினுக்காக விண்வெளிக்கு சென்ற சுனிதா, தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கே தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கிட்டத்தட்ட 9 மாதங்கள் விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவித்த சுனிதாவை மீட்க நாசாவும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாட்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், பத்திரமாக பூமிக்குத் திரும்பினார். இந்திய நேரப்படி சுமார் 3.30 மணிக்கு அவர் பயணித்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம், புளோரிடா மாகாணத்திற்கு அருகில், கடலில் இறங்கி, மிதந்தது.
புட்ச் வில்மோர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் சக பணியாளர்களான அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் இந்திய நேரப்படி நேற்று காலை 10.35 மணிக்கு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட சுனிதா வில்லியம்ஸ், 17 மணிநேர பயணத்திற்குப் பிறகு பூமியை அடைந்தார்.
இந்த ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் வளிமண்டல மறுநுழைவு என அழைக்கப்படும் ஆபத்தான கட்டத்தைக் கடந்து பூமியை நோக்கி பயணித்தது. பிறகு பல்வேறு கட்டங்களாக பாராசூட்கள் விரிக்கப்பட்டு, அதன் வேகம் குறைக்கப்பட்டு, நீரில் இறங்கி, மிதந்தது.
சுனிதா வில்லியம்சை மீட்க ட்ராகன் என்ற விண்கலம் விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. அதில், சுனிதா மற்றும் 3 விண்வெளி வீரர்கள் மொத்தம் 4 பேர் ட்ராகன் உதவியுடன் பூமிக்கு திருப்பினார்.விண்வெளியில் இருந்து பூமிக்குள் நுழையா இவர்கள் நான்கு நிலைகளை கடக்கவேண்டியதாக இருந்தது. சுமார் 17 மணிநேரம் பயணத்திற்கு பின் பூமியில் தரையிறங்கியுள்ளனர்.ட்ராகன் விண்கலத்தில் இருந்து மீட்கப்பட்ட வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர்.உலகமே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மீட்பு பணியாக சுனிதா வில்லியம்ஸின் மீட்பு பார்க்கப்படுகிறது. சுனிதா வில்லியம்ஸின் வருகையை இந்திய மக்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.