Sulur : பிரசித்திபெற்ற அண்ணன்மார் தங்காத்தாள் திருக்கோவில் படுகள திருவிழா – ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மி நடனம்..!

1 Min Read

சூலூர் அருகே பிரசித்திபெற்ற அண்ணன்மார் தங்காத்தாள் திருக்கோவில் படுகள திருவிழாவில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஒரு சேர ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மி நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

- Advertisement -
Ad imageAd image

கோவை மாவட்டம், அடுத்த சூலூர் அருகே காடம்பாடி கிராமத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அண்ணன்மார் மற்றும் தங்காத்தாள் திருக்கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் பிரசித்தி பெற்ற படுகள திருவிழா கோயில் சீரமைப்பு பணிகளால் கடந்த 13 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது.

ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மி நடனம்

அண்மையில் அண்ணன்மார் கோயில் புனரமைப்பு பணிகள் நிறைவுற்ற நிலையில் குடமுழுக்கு விழா விமர்சியாக நடத்தப்பட்டது. இதை அடுத்து ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இணைந்து படுகள பெருவிழாவை நடத்த முடிவெடுத்தனர். அதன்படி படுகளப் பெருவிழ கடந்த 10 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

பிரசித்திபெற்ற அண்ணன்மார் தங்காத்தாள் திருக்கோவில் படுகள திருவிழா

இந்த விழாவின் இரண்டாம் நாளான இன்று கிராமிய கலைகளை பறைசாற்றும் விதமாகவும், கிராமிய கலைகள் குறித்து இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஸ்ரீ அம்மன் கலைக்குழு சார்பில் ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மி நடனம்

அதில் அம்மன் கலைக்குழு மூலம் இலவசமாக கிராமிய கலைகளை பயிலும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சிறுவர் முதல் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி ஒரு சேர ஒரே மாதிரியான நடன அசைவுகளுடன் ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மி ஆடி அசத்தினர்.

அப்போது வண்ண உடைகளில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் கிராமிய பாடல்களுக்கு ஏற்ப நடனமாடியது அங்கு கூடியிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Share This Article

Leave a Reply