சூலூர் அருகே அரசூரில் பாரம் ஏற்றிய லாரி அரசூர் மாரியம்மன் கோவிலுக்கு முன்பாக உள்ள கோவில் கிழிஞ்சி மண்டபத்தின் மீது மோதியது. அதில் கிழிஞ்சி மண்டபம் விடிவு தரைமட்டமானது. இதுகுறித்து இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து உள்ளார்.

சூலூர் அருகே அரசூரில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயில் முன்பாக கிழிஞ்சி மண்டபம் ஒன்று உள்ளது.
அந்த வழியாக கர்நாடக மாநிலம் சிந்து துர்கா பகுதியில் இருந்து மோல்டிங் நிறுவனங்களுக்கு பயன்படுத்தப்படும் இரும்பு பாரம் ஏற்றிய லாரி வந்தது.

இந்த லாரியை சங்ககிரியை சேர்ந்த சாதிக் பாஷா 49 என்பவர் ஓட்டி வந்தார். இவர் அரசூர் மாரியம்மன் கோவில் முன்பாக வந்த போது தனது லாரியை பின்பக்கமாக இயக்கி உள்ளார். அப்போது இந்த லாரியின் பின்பக்கம் மாரியம்மன் கோவில் முன்புறமுள்ள கிழிஞ்சி மண்டபத்தின் மீது பலமாக மோதியது.

அதில் கிழிஞ்சி மண்டபம் முற்றிலும் இடிந்து விழுந்தது. அதை தொடர்ந்து, இந்து சமய அறநிலைத்துறை அதிகாரி தன்ராஜ் லாரி உரிமையாளரான சங்ககிரியை சேர்ந்த அமானுல்லா கான் என்பவரிடம் இழப்பீடு பற்றி பேசி உள்ளார்.
இந்த கோவில் மண்டபம் அமைக்க சுமார் 4 லட்சம் ரூபாய் செலவான நிலையில் லாரி உரிமையாளரான அமானுல்லா கான் ரூ 25 ஆயிரம் மட்டுமே கொடுக்க முடியும் என தெரிவித்ததால் சூலூர் காவல் நிலையத்தில் மண்டபம் இடிப்பு பற்றி புகார் அளித்தார்.

சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை கைப்பற்றினர். லாரி உரிமையாளரும், ஓட்டுனரும் இஸ்லாமியர்கள் என்பதால் கோவில் கிழிஞ்சி மண்டபம் இடிப்பில் வேறு ஏதேனும் மத வெறுப்பு காரணங்கள் உள்ளதா என போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.