விருத்தாசலத்தில் விஷம் கலந்த பாலை குடித்த மாணவி பலி..!

2 Min Read

விருதாச்சலம் அருகே விஷம் கலந்த பாலை குடித்த மாணவி உயர்ந்தார். இந்த சம்பவம் பற்றி விவரம் பின்வருமாறு;

- Advertisement -
Ad imageAd image

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே படுகளாநந்தம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி ஏ. சித்தூர். இவர் அரசு உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கலா வயது 45. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளன. அதில் பாக்கியலட்சுமி, தனலட்சுமி, என்கிற பதினைந்து வயது இரட்டைக் குழந்தைகள் விருதாச்சலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தனர். இந்த நிலையில் காலாவுக்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்துள்ளதால் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

விருதாச்சலம் அரசு ஆஸ்பத்திரி

சம்பவத்தன்று அவருக்கு வலி அதிகமானதால் பாலில் விஷம் கலந்து குடித்துவிட்டு மீதி பாலை வைத்துவிட்டு கழிவறைக்கு சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டதால், படுக்கையறைக்கு வந்து படுத்து விட்டார். இது அறியாத அவரது இரட்டை குழந்தைகளான பாக்கியலட்சுமி, தனலட்சுமி ஆகிய 2 பேரும் விஷம் கலந்த பாலை எடுத்து குடித்து விட்டனர். சற்று நேரத்தில் அவர்களும் மயங்கி விழுந்தனர். இதை பார்த்த கிருஷ்ணமூர்த்தி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக விருதாச்சலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மூணு பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

விருதாச்சலம் காவல் நிலையம்

அதில் தனலட்சுமிக்கு மட்டும் உடல்நிலை மோசமானது. உடன் அவரை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று தனலட்சுமி பரிதாபமாக உயர்ந்தார். இதற்கிடையில் விருதாச்சலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பாக்கியலட்சுமி, கலா ஆகிய இரண்டு பேரையும் குணமடைந்து வீடு திரும்பினர். இது குறித்து புகாரின் பேரில் விருதாச்சலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருப்பினும் விஷம் கலந்த பாலை குடித்து மாணவி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது.

Share This Article

Leave a Reply