போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் .

1 Min Read
  • போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்த அதிமுகவுக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம் மாவட்டம், மருதூர் கிராமத்தில் உள்ள மயான இடத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், சாலை வசதிகளை மேம்படுத்தக்கோரியும், போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தக்கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் வரும் 20ம் தேதி போராட்டம் நடத்த அனுமதி கோரிய விண்ணப்பத்தைப்பரிசீலிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி, விழுப்புரம் தெற்கு மாவட்ட மண்டல அதிமுக செயலாளர் பசுபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வ்ழக்கு நீதிபதி எம். நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சி.அய்யப்பராஜ் ஆஜராகி வாதிட்டார் .

இதனையடுத்து , காவல்துறை விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு போராட்டம் நடத்த வேண்டுமெனக் கூறி, போராட்டத்திற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

Share This Article

Leave a Reply