வத்தலக்குண்டு அருகே தலையில் தேங்காய் உடைத்து வினோத வழிபாடு, பின்பு சாட்டையால் அடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள். கோயில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வைபவம் வத்தலக்குண்டு அருகே உள்ள கிராமக் கோயிலில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே உள்ளது அழகாபுரி கிராமம். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மதுரை வீரன் கோவில் மாசி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இங்கே, ஸ்ரீபட்டவன், தொட்டிச்சியம்மன், அரிச்சியப்பன், காமக்காள், நாகம்மா, சாட்சியப்பன் முதலான குலதெய்வங்களுக்கு ஐந்து வருடத்துக்கு ஒருமுறை திருவிழா நடத்தப்பட்டு, விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இருப்பினும் சென்னை, கோவை, திண்டுக்கல், தேனி, திருச்சி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள குரும்பர் இனத்தவர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, வழிபட்டுச் செல்வார்கள்.

இந்த திருவிழா, நாகம்மாள் கோயிலில் இருந்து கரகாட்டம், எடுத்து, மேளதாளத்துடன் புறப்பட்டு, வஞ்சியோடையில் தொட்டிச்சியம்மன் கரகம் பாலித்தல் நிகழ்ச்சியுடன் கடந்த 29ம் தேதி துவங்கினர்.
எந்த ஆண்டு நடந்த இந்த திருவிழாவையொட்டி கிராமத்து வீதிகளில் பூவால் அலங்கரிக்கப்பட்ட கரகம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் மதுரை வீரன் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் தலையில் தேங்காய் உடைக்கும் வினோத வழிபாடு நடைபெற்றது.

அதில் ஏராளமான பக்தர்கள் வரிசையாக அமர வைக்கப்பட்ட ஆண் பக்தர்கள் தலையில் பூசாரி தேங்காய்களை உடைத்தார். அப்போது தினமும் சிறப்பு பூஜைகளும் விசேஷ வழிபாடுகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கோயிலில் பக்தர்கள், குடும்பம் குடும்பமாக உறவுகளுடன் இருந்து பொங்கல் வைத்து படையல் செய்து, சாமி தரிசனம் செய்து, நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

இதனை தொடர்ந்து ஏராளமான பெண் பக்தர்களும் சாட்டையால் அடி வாங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். பிறகு, காமக்காள் சுவாமி கரகம் பாலித்தல் நடைபெற்றது.
அப்போது ஊருக்குள் உள்ள கோயில் வீட்டில் இருந்து பட்டவன் சுவாமிக்கு கரகம் பாலித்து, பூசாரி அரிவாள் மீது ஏறியபடி கிராமத்தின் பொது இடத்துக்கு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதை அடுத்து பட்டவன் சுவாமி கோயிலை வந்தடைந்தார். பிறகு விரதம் இருந்த பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டு, நேர்த்திக் கடன் செலுத்தப்பட்டது. இந்த திருவிழாவிற்கு திண்டுக்கல், மதுரை,கோவை,நெல்லை,சென்னை உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.