STR 48’ திரைப்படம் தடங்கலின்றி தொடங்குவதில் சிக்கல்… சில பிரச்சினைகளை சிம்பு முடிக்க வேண்டும்… – திரையுலகினர்…

2 Min Read
  • திரையுலகம் : சிம்பு சிறு வயதிலிருந்தே நடித்துவருபவர். வரிசையாக பல படங்களில் நடித்த அவருக்கு ஏகப்பட்ட ஹிட் படங்களாக அமைந்தன. முக்கியமாக திறமை வாய்ந்த நடிகர் என்ற பெயரையும் அவர் பெற்றார். அதேசமயம் ஷூட்டிங்கிற்கு ஒழுங்காக வருவதில்லை என்ற சர்ச்சைகளும் அவரை சுற்றின. மேலும் சில காதல் தோல்விகளும் நடந்தன. சூழல் இப்படி இருக்க திடீரென அவர் ஆன்மீக வழியில் சென்றார். சினிமாவிலிருந்தும் ஒதுங்கினார். இதன் காரணமாக சிம்புவின் கரியர் அவ்வளவுதான் என்று பலர் பேசினார்கள்.

ரீ என்ட்ரி: சூழல் இப்படி இருக்க தனது உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் சரியாக போகவில்லை. அடுத்ததாக அவர் நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் மாநாடும், வெந்து தணிந்தது காடும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. சிம்புவும் மிகச்சிறப்பாக நடித்திருந்தார். இதன் காரணமாக சிம்பு பழைய ஃபார்முக்கு வந்துவிட்டார் என்று அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்து கொண்டாடினார்கள்.

- Advertisement -
Ad imageAd image

இதனையடுத்து STR 48’ திரைப்படம் தடங்கலின்றி தொடங்குமா என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. கமல் மற்றும் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. அதனைத் தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார். இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இதன் படப்பிடிப்பு ‘டிராகன்’ படப்பிடிப்பு முடிந்தவுடன் தொடங்கும் என கூறப்படுகிறது. ஆனால், ‘STR 48’ படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில பிரச்சினைகளை சிம்பு முடிக்க வேண்டும் என்கிறார்கள் திரையுலகினர். ஏனென்றால் வேல்ஸ் நிறுவனம் சிம்புவின் மீது புகார் அளித்துள்ளது. அதுமட்டுமன்றி சிம்புவின் மீது வழக்கும் தொடர்ந்திருக்கிறார்கள்.

கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/two-persons-arrested-for-attacking-the-bus-driver-by-blocking-the-way/

’தக் லைஃப்’ படத்தின் தயாரிப்பாளர் கமல் என்பதால் எந்தவித பிரச்சினையுமின்றி விட்டுவிட்டார்கள். ஆனால், புதிய படம் தொடங்கும் முன்பு வேல்ஸ் நிறுவனத்தின் பிரச்சினையை முடித்தாக வேண்டும். அதனைத் தொடர்ந்தே ‘STR 48’ தொடங்கப்படும் என்றே தெரிகிறது. இதனை முடித்தவுடன் ‘STR 49’ படத்தை தொடங்கவுள்ளார் சிம்பு. இதனை தேசிங்கு பெரியசாமி தயாரிக்கவுள்ளார்.

Share This Article

Leave a Reply