அம்மா உணவகம் – எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு ஸ்டாலின் பதில் .

1 Min Read
அம்மா உணவகம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 20ஆம் தேதி பொது நிதிநிலையும், மார்ச் 21ஆம் தேதி வேளாண் நிதிநிலையும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நிதி மற்றும் வேளாண் நிதிநிலை மீதான விவாதங்கள் நடந்து முடிந்தது. இதனை அடுத்து துறைவாரியான மானியக்கோரிக்கை விவாதங்கள் பேரவையில் நாள்தோறும் நடந்து வருகிறது.

- Advertisement -
Ad imageAd image

சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் கே.என்.நேரு உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசினார். அப்போது அம்மா உணவகம் முறையாக நடத்தப்படுவதில்லை என்று அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் கே.என்.நேரு ’’அம்மா உணவகத்தை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் ஒரு இடத்தில் கூட அம்மா உணவகம் மூடப்படவில்லை. அம்மா உணவகம் விவகாரம் தினமும் அரசியலாக்கப்படுகிறது’’என அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

இந்த விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ’அம்மா உணவகத்தில் தினந்தோறும் உணவு தரமாக இல்லை என்ற குற்றச்சாட்டுத் தினந்தோறும் வருகிறது’ எனக் குற்றம்சாட்டி இருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘அம்மா உணவகத்தைப் பற்றி பத்திரிக்கைகளும், ஊடகங்களும்தான் திட்டமிட்டு செய்திகளைப் பரப்புகின்றன. எந்த உணவகத்தில் உணவு தரமில்லை என்று குறிப்பிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’என்றும் முதலமைச்சர் பதிலளித்தார்.

Share This Article

Leave a Reply