தமிழ்நாடு டாஸ்மாக் முறைகேடு வழக்கு நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் நிலையில் . இந்த வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத்துறை, டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்து இருப்பதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து அரசியல் காலத்தில் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது .
டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் செந்தில் பாலாஜி, அண்ணாமலை இடையே கடுமையான வார்த்தைப்போர் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் சாராய ஊழல் வழக்கில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜெயிலுக்கு செல்வார் என் அதிமுக. எம்.பி. தம்பிதுரை பரபரப்பு பேட்டி அளித்துள்ளார் .
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தம்பிதுரை,” டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் அம்மாநிலத்தில் முதல் அமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், சிசோடியா உள்ளிட்டோர் சிறைக்கு சென்றனா். தற்போது தமிழ்நாடு டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறைக்கு செல்வார்.
எடப்பாடி பழனிசாமி சொன்னதாக, செந்தில் பாலாஜி கூறியது போல, டாஸ்மாக்கில் பல ஆயிரம் கோடி முறைகேடு நடந்து உள்ளது. ஜெயிலுக்கு செல்வதில் இருந்து தப்பிக்க தான், மொழிக் கொள்கை விவகாரத்தில் நாடகமாடி வருகிறார்” என தம்பிதுரை கூறினார். இவரது இந்த பேச்சு அரசியல் களத்தில் புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.