மேஜிக் ஷோ நடத்தும் ஸ்டாலின் – ஆர்.பி.உதயகுமார்..!

3 Min Read
ஆர்.பி.உதயகுமார் - ஸ்டாலின்

திமுகவினரை வைத்து அரசு வலிமையாக உள்ளதை போல் மேஜிக் ஷோ நடத்தும் ஸ்டாலின் முயற்சி பலிக்காது அது பகல் கனவாக தான் இருக்கும்.100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சம்பளத்தை கூட பெற்று தராதவர் இந்தியா கூட்டணியை வைத்து எப்படி இந்தியாவை காப்பாற்றுவார்.தனது இயலாமையை மறைக்க மத்திய அரசின் மீது முதலமைச்சர் பழியை போடுகிறார்.சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார்.

- Advertisement -
Ad imageAd image

மதுரை:தமிழக மக்கள் தற்போது அல்லோலப்பட்டு கண்ணீர் வடித்து வருகிறார்கள்.திமுக அரசின் மீது மக்கள் கடுமையாக கோபத்தில் உள்ளார்கள்.520 தேர்தல் வாக்குறுதியை கொடுத்தார்கள்.ஆனால் அதில் பல்வேறு முரண்பாடு இருந்து வருகிறது.100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை, 150 வேலைவாய்ப்பு திட்டமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், கிராமப்புறங்களில் நடைபெறும்.இந்த திட்டத்தை பேரூராட்சி பகுதிகளில் விரிவுபடுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும்,தினக்கூலி சம்பளம் 300 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள்.

தற்போது நிலைமை என்ன? 13 வாரம் ஆகியும் சம்பளம் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது என திமுக அரசு மீது மக்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.நாள்தோறும் 240 முதல் 260 வரை சம்பளமாக பெற்று வந்தனர் தற்போது ஒவ்வொரு பணியாளருக்கும் 6000 முதல் 9000 வரை சம்பளம் நிலுவையில் உள்ளது. உழைக்கும் மக்களுக்கு கூலியை கூட பெற்று தர முடியாத அரசு இந்த நாட்டுக்கு தேவையா? அதேபோல் இந்த முதலமைச்சரும் நாட்டுக்கு தேவையா? என மக்கள் கூறுகிறார்கள்.முதலமைச்சர் தனது அதிகாரத்தை வைத்துக்கொண்டு பெற்றுத்தர முடியும் ஏன் பெற்றுத் தரவில்லை என மக்கள் கேள்வி கேட்கிறார்கள்.

ஆர்.பி.உதயகுமார்

எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த போது கொரோனா காலங்களில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தங்கு தடை இல்லாமல் விரிவுபடுத்தப்பட்டு சிறப்பாக மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி மக்களின் பாராட்டை மட்டுமல்லாது, மத்திய அரசு விருதினையும் அம்மா அரசு பெற்றது.காவிரி பிரச்சினையில் முதலமைச்சர் கையாளயாக தெரியாமல் தோல்வி அடைந்து விட்டார் அதேபோல்,நெல்,கரும்பு போன்றவைகளுக்கு குறைந்தபட்சம் ஆதார விலை உள்ளது. ஆனால் தக்காளி போன்றவற்றிற்கு குறைந்தபட்ச ஆதார விலை இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

அதேபோல் ஆசிரியர் பிரச்சனை, அரசு ஊழியர் பிரச்சனை, மாணவர்கள் பிரச்சனை, மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளும் உள்ள மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு திட்டத்தில் சம்பளம் நிலுவை உள்ளதால் அனைவரும் போராடி வருகிறார்கள். ஆனால் முதலமைச்சர் மத்திய அரசு மீது பழி போட்டு தப்பிக்க நினைக்கிறார்.மக்களுக்கு 260 ரூபாய் சம்பளம் பெற்று தர முடியவில்லை, ஆனால் தமிழகத்தை வளர்ச்சி மிகுந்த மாநிலமாக எப்படி உருவாக்க முடியும்.

திமுக தேர்தல் வாக்குறுதி எல்லாம் கடலில் கரைத்த பெருங்காயம் போல உள்ளது. மின்சாரம் உயர்வினால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.ஆனால்  மத்திய அரசு மீது பழியை போடுகிறார்கள்.பேசாமல் ராஜினாமா செய்து விட்டுப் போங்கள்.இதே எடப்பாடியார் முதலமைச்சராக இதுபோன்ற நெருக்கடிகள் இருந்தது மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தை எல்லாம் தனது மதிநுட்பத்தால் மக்களை காப்பாற்றினார்.ஆனால் இன்றைக்கு சித்தாந்தம் பற்றி பேசி காலத்தையும், நேரத்தையும்  வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.மக்கள் கொதித்து எழுந்தால் உங்கள் ஆட்சி தாங்காது .

ஆர்.பி.உதயகுமார்

தினந்தோறும் திமுகவினரை வைத்துக்கொண்டு திமுக அரசு வலிமையாக இருப்பதாக மேஜிக் ஷோ நடத்திக் கொண்டு வருகிறீர்கள்.ஆனால் ஒருபோதும் மக்கள் இதை நம்ப மாட்டார்கள். பேடரிடர் நிவாரணத்தை பெற்று தர முடியவில்லை, வளர்ச்சி நிவாரண நிதியை பெற்று தரவில்லை, காவேரி உரிமையை பெற்று தரவில்லை ஆனால் மத்திய அரசு மீது பழியை போட்டு தப்பிக்க பார்க்கிறீர்கள்.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மூலம் மக்களுக்கு உரிய சம்பளத்தை பெற்று தர முடியாத நீங்கள் இந்தியா கூட்டணியில் இருந்து எப்படி இந்தியாவை காப்பாற்றுவீர்கள் இது மிகவும் நகைச்சுவை உள்ளது.

தற்போது சம்பளம் கிடைக்காமல் மக்கள் தீபாவளி பலகாரம், பொருட்கள் வாங்குவதற்கு வழியில்லை ஆகவே ஏழை மக்களை கருணையோடு நீங்கள் அணுக வேண்டும். உங்களுக்கு எதிராக மக்கள் மௌன போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். ஆகவே இனியாவது விழித்துக் கொண்டு பிரச்சனை தீர்க்க நீங்கள் முன்வர வேண்டும் என கூறினார்.

Share This Article

Leave a Reply